வடஇந்தியாவில் புயலை கிளப்பிய டாப்ஸி பானுவின் ஒற்றை ட்வீட்.. பெரும் விவாதம்.. என்ன சொன்னார் தெரியுமா?
டெல்லி: கொள்கை குறித்து மற்றவர்களுக்கு பாடம் எடுக்காதீர்கள் என ஆடுகளம் பட நாயகியான டாப்சி பானு போட்ட அரசியல் ட்வீட் வடமாநிலங்களில் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கடந்த நவம்பர் மாதம் தொடங்கி இப்போது வரை போராடி வருகிறாரகள்.
குடியரசு தினத்திற்கு பின்பு விவசாயிகளின் போராட்டம் உக்கிரம் அடைந்துள்ளது. பெரிய அளவில் டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் குவிந்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ஆதரவு தெரிவித்தார். அப்போது மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

ரிஹானா-கிரேட்டா தன்பெர்க்
இதற்கிடையே டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மற்றொரு உலக பிரலமான சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கும் ஆதரவு தெரிவித்தார், இதனால் சர்வதேச அளவில் தலைநகர் டெல்லியில் நடக்கும் போராட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.

கங்கனா எதிர்ப்பு
இதனிடையே வெளிநாட்டு பிரபலங்களின் கருத்துக்களுக்கு இந்தியாவில் உள்ள பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ட்விட் போட்டு வருகிறார்கள். மத்திய அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கங்கனா ரனாவத், சாய்னா நேவால், சச்சின் டெண்டுல்கர், அமீர்கான், சுரேஷ் ரெய்னா உள்பட பலர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மத்திய அரசு சாலைகளில் ஆணி, தடுப்பு அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது,.

கடும் எதிர்ப்பு
இந்நிலையில் பாலிவுட் நடிகை டாப்ஸி பானு போட்ட ஒரு ட்வீட் வட மாநிலங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் விவசாயிகள் போராட்டம் குறித்து போட்டாரா அல்லது எதை சொல்லி அப்படி போட்டார் என்று தெரியவில்லை. ஆனால் எதிர்ப்பும் ஆதரவும் உள்ளது.

டாப்ஸி ட்வீட்
டாப்ஸி தனது ட்விட் பதிவில். ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமயையும், ஒரு நகைச்சுவை உங்கள் இறை நம்பிக்கையையும், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையையும் படபடக்க வைக்கிறது என்றால், உங்கள் நம்பிக்கை கட்டமைப்பை நீங்கள் தான் வலிமையாக்க வேண்டும். மாறாக பிறருக்கு கொள்கை குறித்து பாடம் எடுக்காதீர்கள்" என காட்டமாக போட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications