டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலவச வேக்சின் என்றால்.. தனியாருக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க அனுமதி ஏன்?.. ராகுல் காந்தி பொளேர்!

Google Oneindia Tamil News

டெல்லி: எல்லோருக்கும் இலவச வேக்சின் என்றால், தனியாருக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க அனுமதி ஏன்? என்று காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய அரசின் கொரோனா வேக்சின் கொள்கை கடந்த சில வாரங்களாக கடும் விமர்சனங்களை சந்தித்து வந்தது. முக்கியமாக போதிய வேக்சின் ஆர்டர் செய்யாததும், மாநிலங்களுக்கு போதிய வேக்சின் வழங்காததும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது.

வெளிநாடுகளிலிருந்து வேக்சின் வாங்க முடிவு.. சோதனை நிலையில் மேலும் 3 தடுப்பூசிகள்.. பிரதமர் பேச்சு! வெளிநாடுகளிலிருந்து வேக்சின் வாங்க முடிவு.. சோதனை நிலையில் மேலும் 3 தடுப்பூசிகள்.. பிரதமர் பேச்சு!

இந்த நிலையில் நாடு முழுக்க எல்லோருக்கும் இலவச வேக்சின் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். கடந்த வருட இறுதியில் இருந்தே கூடுதல் வேக்சின் ஆர்டர் செய்ய வேண்டும், வேக்சின் மட்டுமே கொரோனாவை தடுக்கும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார்.

 பேட்டி

பேட்டி

சமீபத்தில் ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூட, கொரோனா தொற்று என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கும் மோடிக்கும் புரியவில்லை. கொரோனாவை புரிந்து கொள்ள மத்திய அரசு தவறிவிட்டது. லாக்டவுன் தற்காலிக தீர்வு, வேக்சின் மட்டுமே நிரந்தர தீர்வு. மோடி காட்டிய "வித்தைகள்" காரணமாகவே இரண்டாம் அலை ஏற்பட்டது.

கொரோனா

கொரோனா

இந்தியாவில் காட்டப்படும் கொரோனா பலி எண்ணிக்கை பொய். மத்திய அரசு உண்மையான எண்ணிக்கையை மறைத்துவிட்டது. இந்தியாவில் 3% மட்டும் வேக்சின் போட்டு 97% பேருக்கு வேக்சின் போடாமல் இருந்தால், அது பெரிய தவறாக முடியும். தடுப்பூசி உற்பத்தியில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம். ஆனாலும் மக்களுக்கு வேக்சின் கிடைக்கவில்லை, என்று குறிப்பிட்டு இருந்தார்.

பலி

பலி

இந்த நிலையில் தற்போது மத்திய அரசு வேக்சின் கொள்கையை மாற்றியுள்ளது. பிரதமர் மோடி நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாகவும், இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகிக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கேள்வி

கேள்வி

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேக்சினில் 25% வேக்சினை தனியார் வாங்கிக்கொள்ளும். தனியார் மருத்துவமனைகள் தங்கள் வேக்சின் விற்பனையில் 150 ரூபாய் மட்டுமே சர்வீஸ் சார்ஜ் விதிக்க முடியும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது.

 ஏன்

ஏன்

இந்த நிலையில்.. எல்லோருக்கும் இலவச வேக்சின் என்றால், தனியாருக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க அனுமதி ஏன்? என்று காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். எனக்கு ஒரு கேள்வி.. வேக்சின் இலவசம் என்றால் ஏன் தனியார் மட்டும் கட்டணம் வசூலிக்கிறது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

English summary
If vaccines are free for all, why should private hospitals charge for them asks Rahul Gandhi on Union Government's new vaccine policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X