'இதை மட்டும் செய்யாவிட்டால்' பாஜகவுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டம்.. அன்னா ஹசாரே குழு வார்னிங்
டெல்லி: பாஜக கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அன்னா ஹசாரே டீம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் கொண்டு வரக்கோரி கடந்த 2011 ஆம் ஆண்டு அண்ணா ஹசாரவே மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுத்தார்.
'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற பெயரில் நடைபெற்ற போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு கிடைத்தது.

பிரதமர் மோடிக்கு கடிதம்
தற்போது டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி உள்ளிட்ட பலரும் அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு துணையாக இருந்தனர். மத்தியில் அப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட அன்னா ஹசாரேவின் போராட்டமும் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்பட்டது. அதன்பிறகு பெரிதாக போராட்டங்கள் எதையும் முன்னெடுக்காத அன்னா ஹசாரே, பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் மட்டும் எழுதி வருகிறார்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள்
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி 2014 ஆம் ஆண்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால் மிகப்பெரும் போராட்டத்தை அன்னா ஹசாரே குழு முன்னெடுக்கும் என்று அவரது செயலர் கல்பனா இனாம்தார் அறிவித்துள்ளார். தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி பிடித்துள்ள போதிலும் பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் விமர்சித்து கல்பனா இனாம்தார் தெரிவித்தார்.

ராஷ்ட்ரிய கிஷான் மன்ச்
டெல்லியில் ராஷ்ட்ரிய கிஷான் மன்ச் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய கல்பனா இனாம்தார் இந்த தகவலை தெரிவித்தார். தனது பேட்டியின் போது அவர் மேலும் கூறியதாவது:- ஊழல் மற்றும் சமத்துவமின்மை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் அன்னா ஹசரேவிற்கு 2011 ஆம் ஆண்டு ஆதரவு அளித்தனர். இதன் விளைவாகவே காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பாஜக ஆட்சியில் அமர்ந்தது.

பலமுறை கடிதங்கள் எழுதிய நிலையிலும்
ஆனால், பாஜகவின் கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் கிராமப்புற பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. நாட்டில் ஊழல் பெருகிவிட்டது. கிராமப்புறங்களில் உள்ள வளங்களை தொழில் அதிபர்கள் சுரண்டுகின்றனர். ஆனால், அரசு மவுனம் காக்கிறது. அன்னா ஹசாரே பலமுறை கடிதங்கள் எழுதிய நிலையிலும், வாக்குறுதி அளித்தபடி திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்காதது புரிந்து கொள்ளும் படியாக இல்லை.

பாஜகவை அகற்றும்
தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அன்னா ஹசாரே குழு மீண்டும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி பாஜக அரசாங்கத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும்" என்றார். இதையடுத்து பேட்டி அளித்த ராஷ்டிரிய கிஷன் மன்ச் தலைவர் ஷேகர் திகிஷித், மக்களை மத அடிப்படையில் பிரித்து வாக்குகளை பெறுவது எளிது என்றும் அதே மக்களுக்காக களத்தில் பணியாற்றுவது பாஜகவின் அறிவுக்கு அப்பாற்பட்டது எனவும் சாடினார். மேலும் நாட்டில் உள்ள விவசாயிகளும் இளைஞர்களும் விரக்தி அடைந்துள்ளதாகவும் விமர்சித்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications