டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளுத்து வாங்கும் மழை; குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களில் 18 பேர் உயிரிழந்த சோகம்.. நிலவரம் என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய தலைநகர் டெல்லிக்கு இன்று இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். நேற்று பெய்த மழை காரணமாக நகரின் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது. அதேபோல டெல்லி மட்டுமல்லாது குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா என பல மாநிலங்கள் கனமழையை எதிர்கொண்டுள்ளன. இதுவரை இந்த மாநிலங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகா மற்றும் அசாம் மாநிலங்களில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்த அளவில் அதன் கிழக்கு பகுதிகள் கனமழையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, தானே மற்றும் ராய்காட் மற்றும் பால்கர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்த பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

நீலகிரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை - ஊட்டி உள்ளிட்ட 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை நீலகிரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை - ஊட்டி உள்ளிட்ட 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மிதமான மழை

மிதமான மழை

மட்டுமல்லாது அடுத்த 2-3 நாட்களுக்கும் மழை நீடிக்க வாய்ப்பிருப்பதால் மும்பை நகரம் முழுவதும் ஈரப்பதமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பண்டாரா, நாக்பூர், கோண்டியா மற்றும் வார்தா ஆகிய பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.பண்டாரா, கோண்டியா, நாக்பூர், அமராவதி மற்றும் வார்தா உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விதர்பாவின் அகோலா, சந்திரபூர், கட்சிரோலி, யவத்மால், வாஷிம் மற்றும் புல்தானா மாவட்டங்கள் கனமழை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லி

டெல்லி

கனமழை காரணமான பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் நாக்பூர் மாவட்டத்தில் கார் ஒன்றில் பாலத்தை கடக்க பயணிகள் முயன்றபோது அந்த கார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதில் பயணித்த 8 பேரில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள 3 பேரை மீட்புப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். டெல்லியை பொறுத்த அளவில், நேற்று பெய்த மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. மழைநீர் ஆங்காங்கே தேங்கி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குஜராத்

குஜராத்

மேலும் அடுத்த சில மணி நேரங்களில் காசியாபாத், சப்ராவுலா, தாத்ரி, நொய்டா, கிரேட்டர் நொய்டா என என்சிஆரை ஒட்டியுள்ள பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் டெல்லி 2மி.மீ மழையை எதிர்கொண்டுள்ளது. குஜராத் மாநிலத்தை பொறுத்த அளவில், வல்சாத், நவ்சாரி, சூரத், தபி, டாங், நர்மதா, சோட்டா உதேபூர் மாவட்டங்களிலும், சௌராஷ்டிரா பகுதியில் உள்ள கட்ச், ராஜ்கோட், ஜாம்நகர், தேவபூமி துவாரகா மற்றும் மோர்பி ஆகிய மாவட்டங்களிலும் புதன்கிழமை வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட மாநிலங்கள்

வட மாநிலங்கள்

கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் 1ம் தேதி முதல் தற்போது வரை மழை காரணமாக இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து 27,896 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி தெரிவித்துள்ளார். வட மாநிலங்கள் இவ்வாறு இருக்க தென்மாநிலமான தெலங்கானாவில், அடுத்த 3 நாட்களுக்கு பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதன் காரணமாக அடிலாபாத் மற்றும் வரங்கல் என பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறு, ஏரி என நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

 கர்நாடகா

கர்நாடகா

வரங்கள், ஜகிதாயல், கரீம்நகர், பெத்தப்பள்ளி, ஜெயசங்கர் பூபாலபள்ளி, முலுகு, பத்ராத்ரி கொத்தகுடேம் உள்ளிட்ட நகரங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக ஐதராபாத்தின் முக்கிய ஏரியான ஹுசைன் சாகர் ஏரி அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் நகரம் வெள்ளத்தில் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மழை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் மழை ஏற்படுத்திய பாதிப்புகளை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேரில் சென்று ஆய்வு செய்தார். மாநிலத்தின் வடக்கு பகுதியில் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகள் மழையில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
The India Meteorological Department has issued a thunderstorm warning for the national capital Delhi today. Due to yesterday's rains, the temperature in the city has dropped and the weather is cold. Similarly, many states like Gujarat, Maharashtra, Karnataka and Telangana have faced heavy rains not only in Delhi. So far 18 people have died in these states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X