IND vs NZ: ராஞ்சி மேட்ச் ரிசல்ட்களை பார்த்தா தலை சுத்துதே.. வெற்றி வாய்ப்பு யாருக்கு?
டெல்லி: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, இன்று, ராஞ்சியிலுள்ள ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் (JSCA) மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும்.
ராஞ்சி கிரிக்கெட் மைதானம் இந்திய அணிக்கு சாதகமாக இருந்துள்ளதா, பாதகமாக இருந்துள்ளதா, என்பதை கடந்த கால போட்டி முடிவுகள் உங்களுக்குச் சொல்லும்.

இந்திய அணி அருமை
ராஞ்சியின் JSCA மைதானம் இந்திய அணிக்கு சாதகமாக இருந்துள்ளது வரலாறு. இங்கு இதுவரை இரண்டு டி20 சர்வதேசப் போட்டிகள் நடந்துள்ளன, இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்த மைதானத்தில் நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் மூன்றாவது சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணி தனது சாதனையை தக்க வைக்க முயற்சிக்கப்போகிறது. இது நடந்தால், நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டித் தொடரையும் இந்திய அணி கைப்பற்றும்.

38 ஆயிரம் ரசிகர்கள்
38 ஆயிரம் பார்வையாளர்கள் அமர வசதியுள்ள இந்த மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போட்டி குறித்து ரசிகர்களிடையே உற்சாகம் உள்ளது. இந்த மைதானத்தில் முதல் சர்வதேச டி20 போட்டி 2016, 12 பிப்ரவரி அன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்றது.
இதில் இந்திய அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் எளிதான வெற்றியைப் பெற்றது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தினோம்
இரண்டாவது டி20 போட்டி ஆஸ்திரேலியாவுடன் 2017 அக்டோபர் 7ம் தேதியன்று நடைபெற்றது, இதில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இரு முறை மோதல்
இந்த மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் சர்வதேச போட்டியில் மோதுவது இது இரண்டாவது முறையாகும். இரு அணிகளும் 2016 அக்டோபர் 16ம் தேதியன்று ஒரு நாள் சர்வதேச போட்டியில் சந்தித்தன, இதில் நியூசிலாந்து இந்தியாவை 19 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த வகையில் ஐந்து வருடத்திற்கு முந்தைய தோல்விக்கு இந்த மைதானத்தில் தீர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.
Recommended Video

4 வருடங்கள்
JSCA ஸ்டேடியத்தில் ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பிறகு, நவம்பர் 19 ஆம் தேதி ஒரு சர்வதேச போட்டி நடைபெறுகிறது. முன்னதாக 2019-ல் ஜேஎஸ்சிஏ மைதானத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடைபெற்றது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு டி20 போட்டி நடைபெறுகிறது.

மகேந்திர சிங் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின், சொந்த மாநிலத்தில் அமைந்துள்ள மைதானம் இதுவாகும். எனவே அவர் இன்று தனது குடும்பத்தோடு போட்டியை நேரில் பார்வையிட வருவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications