டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லைக் கோட்டு பகுதியில் ஏற்கெனவே நீடித்த நிலையே தொடர்கிறது.. பதற்றம் ஏதும் இல்லை

Google Oneindia Tamil News

டெல்லி: கிழக்கு லடாக்கில் எல்லைக் கோட்டு பகுதியில் இதுவரை இருந்த நிலையே தொடர்வதாக தகவல்கள் கூறுகின்றன.

கிழக்கு லடாக்கில் இந்தியா- சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாஸ்கோவில் நடைபெற்று வந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சீன பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங்கியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

India and China continue remains to be status quo in East Ladakh

நேற்று முன் தினம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்க் யீயும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக சீனாவை இந்தியா குற்றம்சாட்டியது.

இதையடுத்து எல்லையில் அமைதி நிலவ 5 புதிய உடன்படிக்கைகளை கொண்ட ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று 3ஆவது தினமாக எல்லையில் இதுவரை இருந்த நிலையே தொடர்கின்றன. 15 ஆயிரம் அடி உயரத்தில் இரு நாடுகளின் துருப்புகளும் குவிக்கப்பட்டுள்ளன.

அருணாச்சல் பிரதேசத்தில் காணாமல் போன 5 இந்தியர்களை இன்று ஒப்படைக்கிறது சீனா அருணாச்சல் பிரதேசத்தில் காணாமல் போன 5 இந்தியர்களை இன்று ஒப்படைக்கிறது சீனா

Recommended Video

    Ladakh இதுதான் நிலை | Modi-Ajit Doval சந்திப்பு | Oneindia Tamil

    எனினும் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. அதே நேரத்தில் லடாக்கில் வட்டமிட்டுக் கொண்டிருந்த போர் விமானங்களும் குறைவாகவே காணப்படுகின்றன. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் வரை இதே நிலை தொடரும் என தகவல்கள் கூறுகின்றன.

    English summary
    Sources says that India and China continue to be status quo in East Ladakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X