டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லையில் அத்துமீறி கட்டுமானம்.. சீனாவின் பதில் என்ன? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன - பரபர தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேற்று நடைபெற்ற 14ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recommended Video

    Galwan Vally-யில் Indian Flag |lAC-பகுதியில் பாலம் கட்டும் China | Defense Updates

    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாட்டு வீரர்களும் எல்லையில் வீரர்களைக் குவித்து வருகின்றனர்.

    படப்பை குணாவிற்கு உதவியதாக 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி அதிரடி உத்தரவு! படப்பை குணாவிற்கு உதவியதாக 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி அதிரடி உத்தரவு!

    அதிலும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமடைந்தது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

     பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    எல்லையில் மீண்டும் அமைதியான சூழலை உருவாக்க இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே 13 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்துள்ள போதிலும் அமைதியான சூழல் திரும்பவில்லை. இந்தச் சூழலில் நேற்றைய தினம் இரு தரப்பினருக்கும் இடையே 14ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

     எல்லை சிக்கல்

    எல்லை சிக்கல்

    இருப்பினும், இரு நாடுகளும் எல்லை விவகாரத்தில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளுக்கு இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. விரைவில் அடுத்தச் சுற்றுப்பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொங்க லாவிற்கு அருகிலுள்ள கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள பிரச்சினை மற்றும் டவுலெட் பெக் ஓல்டி செக்டார் மற்றும் சார்டிங் நுல்லாவில் யார் ரோந்து செய்யலாம் என்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்து சீனாவை வலியுறுத்த இந்தியா தவறிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

     சீனாவின் கட்டுமானம்

    சீனாவின் கட்டுமானம்

    அதேபோல எல்லைப் பகுதிகளில் சீனா கட்டுமானங்களை ஏற்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அக்சாய் சின் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்கள் ஸ்ரீஜாப் வளாகத்தின் கிழக்கே, பாங்கோங் த்சோவின் மீது கட்டப்பட்டு வரும் பாலம் குறித்து இந்திய ராணுவம் வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியது. இருப்பினும் இதில் சீனா தரப்பில் இருந்து எந்தவொரு முறையான பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

     என்ன சிக்கல்

    என்ன சிக்கல்

    எல்லைப் பகுதிகளில் சீனா கட்டுமானங்களை ஏற்படுத்தி வருவதாகவும் சில பகுதிகளில் ஒட்டுமொத்த கிராமத்தையே உருவாக்கியுள்ளதாகவும் எல்லாம் தகவல் வெளியானது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளும் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தன. இருப்பினும், சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானங்கள் என்பது இந்தியாவுக்கு உட்பட்ட பகுதிகளை இந்தோ சீனா போர் சமயத்தில் சீனா ஆக்கிரமித்தவை ஆகும். இது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The 14th round of India-China military dialogue on Wednesday failed to yield positive outcome. Indian Army raised issue of China building a bridge over Pangong Tso, a border region.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X