டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலத்திற்கு ஏற்ப ஐ.நா.சபை நடவடிக்கை மாற வேண்டியுள்ளது- மோடி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றி வருகிறார்.

உலகத் தலைவர்கள் அனைவரும் ஐ.நா பொதுசபை கூட்டத்திற்கு தங்கள் உரையை வீடியோ வடிவில் அனுப்பியுள்ளனர். பிரதமர் மோடியும் தனது பேச்சு வீடியோவை அனுப்பியுள்ளார். இந்த உரை இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக துவங்கியுள்ளது.

Newest First Oldest First
6:59 PM, 26 Sep

தீவிரவாதம், சட்டவிரோத ஆயுதங்கள் கடத்தல், போதைப்பொருள் மற்றும் பணமோசடிக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது. 150 நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் கொரோனா தொடர்பான மருந்துகளை அனுப்பியுள்ளோம்- ஐ.நா.வில் மோடி உரை. ஐ.நா.சபையில் மோடியின் உரை நிறைவடைந்தது.
6:54 PM, 26 Sep

இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் தடுப்பூசி விநியோக திறன் கொரோனா நெருக்கடியிலிருந்து காப்பாற்றும். ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் கொரோனாவிலிருந்து வெளியேற்ற இந்தியா உதவும்- ஐ.நா.சபையில் மோடி பேச்சு.
6:45 PM, 26 Sep

காலத்திற்கு ஏற்ப ஐ.நா.சபையின் நடவடிக்கையில் மாற்றம் தேவைப்படுகிறது- மோடி கோரிக்கை. ஐ.நா சபை சீர்திருத்தங்களுக்காக இந்திய மக்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள்- மோடி.
6:40 PM, 26 Sep

கடந்த 8 முதல் 9 மாதங்களாக, உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறது. தொற்றுநோய்க்கு எதிரான இந்த கூட்டுப் போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை எங்கே இருக்கிறது?. மூன்றாம் உலகப் போர் தவிர்க்கப்பட்டாலும், பல போர்களும் உள்நாட்டுப் போர்கள் நடந்துள்ளதே- மோடி கேள்வி. பல பயங்கரவாத தாக்குதல்கள் உலகை உலுக்கியுள்ளதே- மோடி குற்றச்சாட்டு.
6:38 PM, 26 Sep

ஐக்கிய நாடுகள் சபையின் 75வது கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்- மோடி
6:36 PM, 26 Sep

ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒன்று இந்தியா என்பதில் பெருமிதம் கொள்கிறோம்- மோடி பேச்சு. இந்த வரலாற்று சந்தர்ப்பத்தில், இந்தியாவின் 1.3 பில்லியன் மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
6:33 PM, 26 Sep

ஐ.நா.சபையில் பிரதமர் நரேந்திர மோடி உரை ஆரம்பம். வீடியோ மூலமாக மோடி உரையாற்றி வருகிறார்.
6:25 PM, 26 Sep

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா செய்த உதவிகளை பிரதமர் பேசுவார் என எதிர்பார்ப்பு
6:09 PM, 26 Sep

ஐ.நா.வில் பிரதமர் மோடியின் உரை 21 நிமிடங்கள் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
5:15 PM, 26 Sep

ஐ.நா.சபையில் இன்று பாகிஸ்தானின் தீவிரவாதிகள் ஆதரவு நடவடிக்கை பற்றி மோடி பேச வாய்ப்பு
4:32 PM, 26 Sep

பிரதமர் மோடி தனது உரையில், உலக வெப்பமயமாதல், தீவிரவாத பிரச்சினை பற்றி பேச வாய்ப்பு உள்ளது
4:31 PM, 26 Sep

இம்ரான் கான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பிரதிநிதி மிஜிடோ வினிடோ ஐநா சபை கூட்டத்தில் இருந்து வெளியேறினார்
4:31 PM, 26 Sep

ஐநா பொதுசபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று பேசினார்.
8:07 AM, 23 Sep

மற்ற நாடுகளுடனான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் சீனா குறைக்கும் என பேச்சு. நாட்டு எல்லைகளை விரிவுபடுத்த சீனா ஒரு போதும் முயற்சி செய்யாது: ஜி ஜின் பிங் பேச்சு.
8:05 AM, 23 Sep

பிறநாடுகள் மீது அதிகாரம் செலுத்த சீனா விரும்பவில்லை: அதிபர் ஜி ஜின் பிங் பேச்சு. ஐநா சபையின் 75ம் ஆண்டு நாள் கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின் பிங் பேச்சு.
6:55 AM, 23 Sep

அக்டோபருக்குள் படைகளை வாபஸ் பெற வேண்டும்: இந்தியா- சீனா ஒப்புதல். லடாக்கில் பதற்றத்தை தணிக்க 14 மணி நேரம் நீடித்த 6ம் கட்ட பேச்சுவார்த்தை.
10:39 PM, 22 Sep

எல்லையில் கூடுதல் படைகள் அனுப்புவது நிறுத்தப்படும் - இந்தியா-சீனா கூட்டறிக்கை வெளியீடு. எல்லை பகுதியில் சூழ்நிலையை மாற்றும் போக்கை கைவிட வேண்டும். நிலைமையை சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும்
10:03 PM, 22 Sep

இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம். இந்தியா சீனா ராணுவ அதிகாரிகளின் 6 வது கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டறிக்கை. எல்லை பதற்றத்தை தணிக்க இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை. இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் 7வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவு
9:35 PM, 22 Sep

எந்த ஒரு நாட்டுடனும் சண்டையிட விரும்பவில்லை - சீன அதிபர் ஜீ ஜின்பிங். அமைதியான, பொதுவான வளர்ச்சிக்கு சீனா உறுதி பூண்டுள்ளது - சீன அதிபர். ஐக்கிய நாடுகள் சபையில் 75வது பொதுக்கூட்டத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உரை. பிற நாடுகளுடனான பிரச்சினைகளை பேசி தீர்வு காண்போம் - சீன அதிபர்
10:52 AM, 22 Sep

இந்தியா சீனா இடையே ராணுவ மட்டத்திலான 13 மணி நேர பேச்சுவார்த்தை. படைகளை வாபஸ் பெறுங்கள் சீனாவுக்கு இந்தியா அழுத்தம்.
8:27 PM, 21 Sep

சீனாவுக்கு பதிலடி தர தூத்துக்குடி துறைமுகத்தை சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்ற முனையமாக்குக- கனிமொழி
8:35 AM, 21 Sep

3 வாரங்களில் 6 முக்கிய மலைகளை இந்தியா கைப்பற்றியது- அறிக்கையில் தகவல். இந்திய சீன எல்லை பிரச்சினைக்கு இடையே செயலற்று கிடந்த 6 முக்கிய மலைகளை கைப்பற்றியது இந்தியா.
6:52 AM, 21 Sep

இந்தியா- சீனா இடையே இன்று ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை. இந்தியா-சீனா 6-வது கார்ப்ஸ் கமாண்டர்-லெவல் சந்திப்பு இன்று நடைபெற உள்ளது.
12:10 AM, 21 Sep

இந்தியா-சீனா இடையே ராணுவ மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை. இந்தியா-சீனா ஆறாவது கார்ப்ஸ் கமாண்டர்-லெவல் சந்திப்பு இன்று நடைபெற உள்ளது
7:33 AM, 20 Sep

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடைவிதிக்கும் முடிவு ஒரு வாரத்திற்கு ஒத்தி வைப்பு. டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்க டிரம்ப் காலக்கெடு விதிப்பு. திடீர் திருப்பமாக டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதித்த தடை ஒரு வாரத்திற்கு தடைவிதிப்பு.
6:48 AM, 20 Sep

டிக் டாக் செயலிக்கு தடை- அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம். இந்தியா- சீனா எல்லையில் மோதல் தொடர்பாக இந்தியாவில் 106 செயலிகளுக்கு தடை. இந்தியாவை போல அமெரிக்காவிலும் டிக்டாக் மற்றும் வீ சாட்டை தடை செய்ய கோரிக்கை. அமெரிக்காவின் இந்த தடை நடவடிக்கையை சீனா உறுதியாக எதிர்க்கிறது. சீன நிறுவனங்களின் நலனை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுக்கத் தயார்.
6:21 AM, 19 Sep

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் பதற்றத்தை தணிக்க ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை. பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் லடாக்கில் துவங்குகிறது. சீனா தலைமையில் நடந்த சிஎஸ்ஜி கூட்டத்தில் நேற்று முடிவு. அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டனர்.
6:16 AM, 19 Sep

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் பதற்றத்தை தணிக்க ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை. பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் லடாக்கில் துவங்குகிறது. சீனா தலைமையில் நடந்த சிஎஸ்ஜி கூட்டத்தில் நேற்று முடிவு. அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டனர்.
6:10 AM, 18 Sep

கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் சீன வீரர்கள் பலியானது உண்மைதான். சீன வீரர்கள் கொல்லப்பட்டது உண்மை- இந்தியா சொல்லும் எண்ணிக்கையைவிட குறைவு. சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கால்வன் மோதல் குறித்து தலையங்கம். இந்திய ராணுவத்திடம் சீன வீரர்கள் ஒருவர்கூட சரணடையவில்லை. இந்திய வீரர்கள் மலைகளில் இருந்து உருண்டும் ஆறுகளில் விழுந்தும் மரணித்தனர்- குளோபல் டைம்ஸ். இந்திய வீரர்கள் சீனா ராணுவத்திடம் சரணடைந்தனர்.
6:09 AM, 18 Sep

எல்லைகளில் இந்தியாவின் ரோந்து பணிகளை தடுக்க உலகில் எந்த சக்தியாலும் முடியாது: ராஜ்நாத்சிங்
READ MORE

Modi
English summary
India-China Border fight Latest News Live Updates in Tamil is here, stay tune with us for current news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X