இந்தியாவில் 3-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைவு- 24 மணிநேரத்தில் 6,660 பேருக்கு தொற்று!
டெல்லி: இந்தியாவில் 3-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 6,660 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த வாரம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,000-த்தை தாண்டியதாக பதிவாகி இருந்தது. கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்தியாவில் நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 9,011 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர். மேலும் 7,178 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. தினசரி பாதிப்பு விகிதம் 9.16% வாராந்திர பாதிப்பு விகிதம் 5.41% இதுவரை மொத்தம் 92.54 கோடி சோதனைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை வரை 78,342 சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தியாவில் நேற்று ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 65,683 பேர்.
இந்த நிலையில் இன்று 3-வது நாளாக இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் 6,660 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியானது. நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இன்று ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 63,380.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 24 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,31,369.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications