’இன்னா செய்தாரை ஒருத்தல்’ வெள்ள பாதிப்பு.. பாகிஸ்தானை தக்க நேரத்தில் அலர்ட் செய்த இந்தியா
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் பதற்ற சூழலிலும், நல்லெண்ண அடிப்படையில் தாவி ஆற்றில் வெள்ள அபாயம் இருப்பதை இந்தியா பாகிஸ்தானுக்கு எச்சரித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருந்தும், தூதரகம் வழியாக தகவல் பகிரப்பட்டது. நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான் என்று சொல்வது போல இந்தியாவின் செயல் அமைந்து இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மே மாதம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 25 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தகர்த்தது.

இந்தியா பாகிஸ்தான் மோதல்
இதனால், கோபம் அடைந்த பாகிஸ்தான், இந்தியா மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்க முற்பட்டது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தனது பிரமோஸ் ஏவுகணைகள் பதிலடி கொடுத்தது. வான் வாதுகாப்பு அமைப்பு மூலமாக பாகிஸ்தான் டிரோன்களை வானிலேயே தாக்கி அழித்தது. இந்தியாவின் தாக்குதலால் கதி கலங்கிய பாகிஸ்தான், சண்டை நிறுத்தம் செய்யுமாறு கெஞ்சியது.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. எல்லையில் தொடர்ந்து அடாவடி செயலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட நினைத்த அந்ந நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. பாகிஸ்தானின் பெரும்பகுதி விவசாயம் சிந்து நதி நீரை மட்டுமே நம்பியிருப்பதால், இந்தியாவின் முடிவால் அந்த நாடு அதிர்ச்சி அடைந்தது.
நல்லெண்ண அடிப்படையில் தகவல்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததை மறு பரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான், இந்தியாவிடம் கெஞ்சி வருகிறது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்த விவகாரங்களால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இத்தகைய பகை சூழலிலும் கூட நல்லெண்ணத்துடன் இந்தியா ஒரு காரியம் செய்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தாவி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டு இருக்கும் தகவலை பாகிஸ்தானிடம் இந்தியா முன்கூட்டியே எச்சரித்துள்ளது. இந்திய தூதரகம் வாயிலாக பாகிஸ்தானுக்கு இந்த தகவல் பகிரப்பட்டு இருக்கிறது. சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வழக்கமான முறைப்படி இந்தியா, இந்த தகவலை பகிராமல் நல்லெண்ண அடிப்படையில் மாற்று வழியில் பகிர்ந்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
தாவி நதியில் பெரு வெள்ளம்
எனினும், இது தொடர்பாக இந்தியா தரப்பிலோ, பாகிஸ்தான் தரப்பிலோ அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. வெள்ள அபாயம் போன்ற தகவலை தூதரக வழியாக இந்தியா பகிர்வது இதுவே முதல் முறையாகும். இதுபோன்ற தகவல்கள் இருநாட்டு நீர்வளத்துறை ஆணையர்கள் வாயிலாக பகிரப்பட்டு வந்தது. ஜம்முவில் தாவி நதியில் பெரு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்தியா தனது எச்சரிக்கையினை பாகிஸ்தானிடம் பகிர்ந்ததாக பாகிஸ்தான் ஊடகங்களும் தெரிவித்துள்ளன.
தாவி நதி எங்கே இருக்கிறது
தாவி நதி என்பது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் வழியாக பாய்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு செல்கிறது. தாவி ஆறு செனாப் நதியின் இடது கரையில் பாயும் ஒரு முக்கிய துணை நதியாகும்.
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்."
என்ற குறளுக்கு ஏற்ற படி இந்தியாவின் செயல்பாடு அமைந்துள்ளதாக பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications