ஈரானில் தீவிரமடையும் தாக்குதல்.. ஆபரேஷன் 'சிந்து' நடவடிக்கை மூலம் மாணவர்களை மீட்கிறது இந்தியா!
டெல்லி: ஈரான்-இஸ்ரேல் போர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு 'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின் மூலம் மீட்டு வருகிறது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் குறிப்பில், "ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் மோதலால் நிலைமை மோசமடைந்து வருவதால், ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்காக, மத்திய அரசு கடந்த பல நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதற்கட்டமாக, இந்தியத் தூதரகம் வடக்கு ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்களை வெளியேற்றியுள்ளது. அவர்கள் ஜூன் 17ம் தேதி அர்மீனியாவுக்குப் பாதுகாப்பாகச் செல்ல உதவி செய்தது. இந்த மாணவர்கள், ஈரானில் உள்ள நம்முடைய தூதரகங்கள் மற்றும் அர்மீனியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மேற்பார்வையின் கீழ், சாலை வழியாக அர்மீனியத் தலைநகர் யெரெவானுக்குப் பயணம் செய்தனர்.
இந்த மாணவர்கள் ஜூன் 18 அன்று 14:55 மணிக்கு ஒரு சிறப்பு விமானத்தில் யெரெவானிலிருந்து புறப்பட்டனர். "ஆபரேஷன் சிந்து"வின் ஆரம்ப கட்டமாக, ஜூன் 19ம் தேதி அதாவது நாளை அதிகாலையில் புது டெல்லியை வந்தடைவார்கள். இந்த வெளியேற்றும் நடவடிக்கைக்குச் சீரான ஒத்துழைப்பு வழங்கிய ஈரான் மற்றும் அர்மீனியா அரசுகளுக்கு இந்திய அரசு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
வெளிநாடுகளில் உள்ள இந்தியக் குடிமக்களின் பாதுகாப்புக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கிறது. 'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம், அதிகமான மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான இந்தியக் குடிமக்களை நகர்த்தவும், பின்னர் அவர்களை வெளியேற்றவும் உதவி செய்து வருகிறது.
ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள், தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அவசர உதவி எண் மூலமாகவும், புது டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள 24x7 கட்டுப்பாட்டு அறையுடனும் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அவசர உதவி எண்கள்:
i. அழைப்புகளுக்கு மட்டும்: +98 9128109115, +98 9128109109
ii. வாட்ஸ்அப்பிற்கு: +98 901044557, +98 9015993320, +91 8086871709
iii. பந்தர் அப்பாஸ்: +98 9177699036
iv. சஹேதான்: +98 9396356649
v. மின்னஞ்சல்: [email protected]
புது டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள 24 X 7 கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள்: 800118797 (கட்டணமில்லா அழைப்பு), +91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905 வாட்ஸ்அப்: +91-9968291988; மின்னஞ்சல்: [email protected]" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்! -
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
அவ்வளவு தான்..சோலி முடிஞ்சு! தள்ளாடுதே தங்கம்! காசை போட்டவர்கள் பெரும் கவலை! எதனால் இப்படி நடக்குது? -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி?












Click it and Unblock the Notifications