"காம்பாட் ரெடி மோட்".. மோடி கண்ணசைத்ததும்.. எல்லையில் குவிக்கப்பட்ட முப்படைகள்.. கதறும் பாகிஸ்தான்
டெல்லி: இந்திய எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது. எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என பாக். பதற்றம் அடைந்து வரும் நிலையில் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி முழு செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் கூட்டிய உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

90 நிமிடம் நீடித்த இந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தளபதிகள் - ராணுவத் தலைமை ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தலைமை அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைமை மார்ஷல் அமர் ப்ரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மோடி தந்த பவர்
தீவிரவாதத்திற்கு அழிவு தரும் அடியை கொடுக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. இதற்கான முழு அதிகாரம் உங்களுக்கு தருகிறோம். இந்திய ஆயுதப் படைகளின் திறன்களில் எனக்கு முழு நம்பிக்கையை உள்ளது,. உங்களுக்கு ராணுவ தாக்குதல் திட்டமிடலில் முழு அதிகாரம், சுதந்திரத்தை தருகிறோம்., என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.
படைகள் குவிப்பு
இந்திய எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது. எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என பாக். பதற்றம் அடைந்து வரும் நிலையில் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு உள்ளது. முப்படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடற்படை பாகிஸ்தான் அருகே களமிறக்கப்பட்டு உள்ளது. ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை தயார் நிலையில் உள்ளன. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
காம்பாட் ரெடி
முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன் குமார்
இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன் குமார் அண்ணாமலை வாரியர்ஸ் என்ற பக்கத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இதன் சூத்திதாரி அசிம் முனீர். அவர் ராணுவ தளபதி. அவர் இருக்கும் இடம் ராவல்பிண்டி. அதாவது ராவல்பிண்டிதான் ராணுவ தலைமையகம் உள்ளது. இந்த ராவல்பிண்டிதான் இந்தியா தாக்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கினால் வேலைக்கு ஆகாது. பாகிஸ்தான் பஞ்சாப்பில் தாக்க வேண்டும்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் சிந்துவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கினால் வேலைக்கு ஆகாது. பாகிஸ்தான் பஞ்சாப்பில் அடிக்காத வரை, ராவல்பிண்டியில் அடிக்காத வரை எதுவும் ஆகாது. அதற்கெல்லாம் நம்மிடம் பவர் இருக்கிறது. ராவல்பிண்டியில்தான் தாக்குதல் என்பது இருக்க வேண்டும். பிரம்மோஸ்க்கு பதிலடி தர அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை.. தடுப்பு அரண்கள் இல்லை என்பதை மறக்க வேண்டாம்.
நம்மிடம் ஆப்ஷன் நிறைய உள்ளது. முப்படை தளபதிகள் காம்பாட் ரெடி மோடில் உள்ளனர். போருக்கு செல்லும் முந்தைய நிலை இது என்று மேஜர் மதன் குமார் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications