இதுதான் புத்தாண்டு பரிசு.. ஜப்பானை தட்டி தூக்கிய இந்தியா.. உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்தது!
டெல்லி: இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் தான் உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்து இருந்தது. இதற்கிடையே ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இப்போது உருவெடுத்துள்ளது. வலிமையான பொருளாதாரமும் தொடர்ச்சியான சீர்திருத்தங்களுமே இதற்குக் காரணம் என மத்திய அரசு கூறியுள்ளது.
உலகின் மிக முக்கியமான பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே, குறிப்பாகக் கொரோனாவுக்குப் பிறகு பல நாடுகளில் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இலங்கை தொடங்கிப் பல நாடுகளை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், அனைத்துச் சிக்கல்களையும் சமாளித்து இந்தியா தொடர்ந்து வேகமாகவே வளர்ந்து வருகிறது.

ஜப்பானை முந்திய இந்தியா
இதற்கிடையே ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இப்போது உருவெடுத்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இப்போது 4.18 டிரில்லியன் டாலராக இருக்கிறது. 2030ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வலுவான உள்நாட்டு நுகர்வு, கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் ஆகியவையே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகத் திகழ்கிறது.
உலக வர்த்தகப் பதற்றம், நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும் 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் ரியல் ஜிடிபி 8.2%ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத உச்சத்தை இந்திய ஜிடிபி எட்டியுள்ளது. கடந்தாண்டு இதே காலாண்டில் இது 7.4%ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சீக்கிரமே 3வது இடம்
வலுவான பொருளாதாரம் மற்றும் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் காரணமாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2030ஆம் ஆண்டுக்குள் 7.3 டிரில்லியன் டாலரை எட்டும் என அரசு கணித்துள்ளது. இதன் மூலம் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். இப்போது உலகின் முதல் இரண்டு பெரிய பொருளாதாரங்களாக அமெரிக்காவும் சீனாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது..
சர்வதேச அமைப்புகள்
இந்தியாவின் வளர்ச்சி வரும் காலங்களிலும் சிறப்பாகவே இருக்கும் என்றே பல சர்வதேச நிதி அமைப்புகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. 2026ல் இந்தியாவின் வளர்ச்சி 6.5%ஆக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. 2026இல் இந்திய வளர்ச்சி 6.4%ஆகவும் 2027இல் 6.5%ஆகவும் இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே அளவில் வளர்ந்தால் அதிவேக வளர்ச்சியைப் பதிவு செய்த G20 நாடாக இந்தியா இருக்கும்.
சர்வதேச நாணய நிதியம் கூட 2026ல் இந்தியாவின் வளர்ச்சி 6.2%ஆக இருக்கும் எனக் கணித்துள்ளது.. மேலும் OECD, S&P, ஆசிய வளர்ச்சி வங்கி, ஃபிட்ச் நிறுவனம் என்று பல்வேறு அமைப்புகளும் இந்தியா வலிமையான வளர்ச்சியையே பதிவு செய்யும் எனக் கணித்துள்ளன.
காரணங்கள் என்ன
இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளதே இதற்குக் காரணம் என அரசு சுட்டிக்காட்டியுள்ளது. பணவீக்கம் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குக் கீழே உள்ளது., வேலையின்மை கட்டுக்குள் இருக்கும் நிலையில், ஏற்றுமதியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவை எல்லாம் சேர்த்தே இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துகிறது.
இது தொடர்பாக மத்திய அரசு மேலும், "இந்தியா உலகின் அதிவேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும், இந்த வேகத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நல்ல நிலையில் இந்தியா உள்ளது. 2047ஆம் ஆண்டிற்குள் ஹை மிடில் வருவாய் கொண்ட நாடாக இந்தியா மாறும். பொருளாதாரம், கட்டமைப்புச் சீர்திருத்தங்கள், சமூக முன்னேற்றம் ஆகியவையே நாட்டின் அடிப்படையாக உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. ஜப்பானை தொடர்ந்து நேபாளம் போட்ட திடீர் தடை.. ஷாக் பின்னணி -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம்












Click it and Unblock the Notifications