இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 3 லட்சத்தை கடந்தது.. உலகளவில் இறப்பில் 3-வது இடம்.!
டெல்லி: கொரோனா உயிரிழப்பில் 3 லட்சத்தை கடந்து அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை பாடாய்படுத்தி விட்டது. இப்போது நிலைமை ஓரளவு பரவாயில்லை.
ஆனால் சில வாரங்களுக்கு முன்பு தினமும் அதிகளவு பாதிப்புகள், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காமல் , படுக்கைகள் கிடைக்காமல் பலர் உயிரிழப்பு என்று மோசமான நிலையில் இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 240,842 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,741 உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இதன் மூலம் இந்தியா கொரோனா உயிரிழப்பில் 3 லட்சத்தை கடந்து அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3,03,751 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்கா 5,89,703 உயிரிழப்புகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. 4,48,208 இறப்புகளுடன் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா 33,892,001 எண்ணிக்கையை பெற்று முதல் இடத்தில் உள்ளது. 26,751,681 பாதிப்புகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பெறுகின்றன.












Click it and Unblock the Notifications