இந்தியா: ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,000-த்தை தாண்டியது! 24 மணிநேரத்தில் 1,134 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,134 ஆக பதிவாகி உள்ளது.
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 1,000-த்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று காலை 8 மணியுடனான 24 மணிநேரத்தில் இந்தியாவில் 699 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவானது.

இந்த நிலையில் இன்று காலை 8 மணியுடனான 24 மணிநேரத்தில் நாட்டில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் விகிதமான 0.7%-ல் இருந்து 1.9% ஆக அதிகரித்துள்ளது. வாராந்திர கொரோனா தொற்று பரவல் விகிதம் 0.98% ஆக உள்ளது.
நாட்டில் டெல்லியில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. டெல்லியில் கொரோனா பரவல் விகிதம் 5.83% ஆக உள்ளது. முன்னதாக திங்கள்கிழமையன்று 34 பேருக்கு டெல்லியில் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 682,715,331. உலகம் முழுவதும் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,821,190. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 655,686,679. உலக நாடுகளில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 80,612 . இதில் தென்கொரியாவில் மட்டும் 12,016 பேருக்கு நேற்று மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறவர்கள்- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 7026. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் குணமடைந்தவர்கள் 44160279. இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 530813.
இந்தியாவில் நேற்று காலை 8 மணிவரை 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.20 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 7,463 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடனான 24 மணி நேரத்தில் 435 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,59,617 பேர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications