இந்தியா கொரோனா பாதிப்பு 13ஆயிரமாக சரிவு... 1,81,075 பேருக்கு சிகிச்சை
நாடு முழுவதும் புதிதாக 13,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை
டெல்லி: நாடு முழுவதும் புதிதாக 13,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 54 நாட்களில் இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு சரிந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,81,075 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 21,056 குறைவு ஆகும்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்றாம் அலையில் மூன்று லட்சம் பேருக்கு மேல் பதிவானது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் பதிவான கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து 50 ஆயிரத்திற்கும் மேலே பதிவானது. தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. தற்போது ஊரடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிதாக கொரோனா தொற்று நேற்று 16 சதவீதம் குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 29ஆம் தேதி நிலவரப்படி தினசரி பாதிப்பு 13,154 ஆக இருந்தது. மறுநாள் 16 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் கடந்த 54 நாட்களில் இல்லாத அளவில் தொற்று பாதிப்பு சரிந்துள்ளது. மொத்த பாதிப்பு 4,28,51,929 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 34,226 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,21,58,510 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 128 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 235 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,12,344 ஆக உயர்ந்தது.
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,81,075 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 21,056 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் இதுவரை மக்களுக்கு 175. 83 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 35,50,868 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும்.
இதற்கிடையே நேற்று 10,84,247 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை 76.12 கோடியாக உயர்ந்துள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications