இந்தியாவில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு- நேற்று 6,990 பேருக்கு பாதிப்பு; 190 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 6,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் 190 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்திலான கொரோனா பாதிப்பு, கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான மத்திய அரசின் அறிக்கை: மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 156 நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. இது 551 நாட்களில் மிகவும் குறைவாகும்.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.35 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிக அதிக அளவு. கடந்த 24 மணி நேரத்தில் 10,116 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,40,18,299 என அதிகரித்துள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,00,543 இது 546 நாட்களில் குறைந்தது. கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.29 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.

பாதிப்பு விகிதம் குறைவு
தினசரி பாதிப்பு விகிதம் 0.69, இது கடந்த 57 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 16 நாட்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 0.84 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 92 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

மரணங்கள்
கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக ஒருநாள் கொரோனா மரணங்கள் 600ஐ தாண்டியதாக இருந்தது. நேற்று 300க்கும் கீழே இருந்தது. இன்று 200க்கும் கீழே குறைந்து 190 ஆக உள்ளது. நாட்டில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.
Recommended Video

பரிசோதனைகள்- தடுப்பூசிகள்
கடந்த 24 மணி நேரத்தில் 10,12,523 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 64.13 கோடி கொவிட் பரிசோதனைகள் (64,13,03,848) செய்யப்பட்டுள்ளன. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 78,80,545 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 123.25 கோடியைக் (1,23,25,02,767) கடந்தது. 1,28,09,178 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 123.25 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. இவ்வாறு மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications