இந்தியாவில் அதிவேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: 24 மணிநேரத்தில் 12,847 பேருக்கு தொற்று- 14 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 12,847 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று முன்தினம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,822 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று காலையுடனான ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,213 ஆக பதிவானது. தற்போது 2-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 12,000-த்தை தாண்டி இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 12,847 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இது நேற்றைவிட 5.2% அதிகமாகும்.நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,32,70,577 ஆகும்.

இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 5,24,817 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறக் கூடிய கேஸ்கள் எண்ணிக்கை இன்று 60,000-த்தை தாண்டி உள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு 58,215 பேர் கொரோனாவுக்கு நேற்று சிகிச்சை பெற்றனர். இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் இந்த எண்ணிக்கை 63,063 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications