உலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்

உலக அளவில் கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,68,58,407 ஆக அதிகரித்துள்ளது. இந்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 76 ஆயிரத்து 737 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுவதும் பரவியுள்ளது. அமெரிக்காவில்தான் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

India’s Covid-19 update: India recoveries world wide number 1

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,56,92,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 2,68,58,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு 10,45,826 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பிற்கு ஆளான 7,78,8,418 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,82,073 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 56,59,110 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவினால் 1,03600 பேர் நாடு முழுவதும் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 919,363 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,78,090 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 48,89,994 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவிற்கு 2,14,989 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பிற்கு ஆளான 25,73,107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியல்

  • இந்தியா - 5,659,110
  • அமெரிக்கா - 4,889,994
  • பிரேசில் - 4,295,302
  • ரஷியா - 982,324
  • கொலம்பியா - 766,300
  • பெரு - 712,888
  • அர்ஜெண்டினா - 649,017
  • தென் ஆப்ரிக்கா - 615,684
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+