கனடா நாட்டவருக்கான விசாவை அதிரடியாக நிறுத்தியது மத்திய அரசு!
டெல்லி: கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை மத்திய அரசு அதிரடியாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதிகள் விவகாரத்தில் கனடா மோதல் போக்கை கடைபிடிப்பதால் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் படுகொலைக்கு இந்தியாதான் காரணம் என அந்நாடு பகிரங்கமாக குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரியை வெளியேறவும் கனடா உத்தரவிட்டது. இதற்கு மத்திய அரசு பதிலடியாக, இந்தியாவில் இருந்து கனடா தூதரக மூத்த அதிகாரியை வெளியேற்றியது.

கனடாவின் இந்த மோதல் போக்கால் இருநாடுகளிடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு நேற்று அறிவுறுத்தல் விடுத்திருந்தது.
இந்நிலையில் கனடா நாட்டவருக்கான விசா வழங்கும் நடைமுறைகளை மத்திய அரசு அதிரடியாக இன்று நிறுத்தி வைத்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் சீக்கியர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் தனிநாடு உருவாக்க வேண்டும் என்பதற்காக 1980கள் முதல் 1990கள் வரை ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. 1990களில் காலிஸ்தான் இயக்கம் அழிக்கப்பட்டது.
இதனையடுத்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் பலர் போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசியல் அகதிகளாக தஞ்சமடைந்தனர். அங்கும் போய் காலிஸ்தான் தனிநாட்டுக்கான இயக்கங்களை இந்த பயங்கரவாதிகள் நடத்தினர். மேலும் இந்தியாவுக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இணைந்து இந்தியாவில் மீண்டும் காலிஸ்தான் இயக்கத்தை உருவாக்க முயற்சித்தனர்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவைகளில் ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்தியதும் காலிஸ்தான் பயங்கரவாதிகள்தான். இந்த காலிஸ்தான் ஸ்லீப்பர் செல்கள்தான் பஞ்சாப், ஹரியானாவில் திடீரென பிரிவினைவாத முழக்கங்களை ரயில் நிலையங்களில் எழுதுவது, சட்டசபை சுவர்களில் எழுதுவது என பல செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இப்படியான இயக்கங்களில் ஒன்று காலிஸ்தான் புலிப் படை. இதன தலைவரான நிஜ்ஜார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதால் தற்போது இந்தியா- கனடா இடையே மோதல் வெடித்துள்ளது. கனடா, இந்தியா நாடுகளிடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உலக நாடுகள் தற்போது நமது நாட்டுக்கு ஆதரவாகவே இருக்கின்றன.
-
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications