ட்ரோனை வைத்து ஆட்டம் காட்டும் இந்தியா.. கொஞ்சம் மாற்றி யோசித்த ராணுவம்! இப்படி கலக்குதே!
டெல்லி: ட்ரோனிலிருந்து V3 ஏவுகணையை ஏவி இந்திய ராணுவம் பரிசோதித்திருக்கிறது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடந்திருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் ட்ரோன்கள் ராணுவ தாக்குதலில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் உள்ள சோதனை தளத்தில், ட்ரோன்கள் மூலம் ஏவுகணைகள் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன. சோதனை வெற்றியடைந்ததையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். இந்த சோதனை இந்தியாவின் ஏவுகணை திறன்களை மேம்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இதில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணையானது சமீபத்தில் நடந்த ஏரோ இந்தியா நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதில் ULPGM-V3 மாறுபாடு, அதிநவீன இமேஜிங் அகச்சிவப்பு தேடுபொறிகள் மற்றும் இரட்டை உந்துவிசை அமைப்புகள் இருக்கின்றன. இவை அனைத்தும் V3 மாடலை மேலும் திறமையானதாக மாற்றுகின்றன.
இந்த ரக ஏவுகணைகள், ட்ரோன்கள் மட்டுமல்லாது விமானங்கள், ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவை இலகுரகத்தை சேர்ந்ததாகும். இருப்பினும் துல்லியமான தாக்குதலை நடத்தும். போர் சூழ்நிலைகளில் இதை எப்படி வேண்டுமானாலும் நாம் பயன்படத்திக்கொள்ளலாம்.
இந்த ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்ட கர்னூல் சோதனை மையம், DRDO-ன் அதிநவீன தொழில்நுட்பங்களை பரிசோதிக்கும் முக்கிய இடமாக விளங்குகிறது. சமீபத்தில், இந்த இடத்தில் உயர் ஆற்றல் லேசர் அடிப்படையிலான டைரக்ட் எனர்ஜி ஆயுதங்களை ராணுவம் சமீபத்தில் சோதித்து பார்த்திருந்தது.
சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சிக்கல்
இந்த அப்டேட் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும். ஏற்கெனவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் நம்மிடமிருந்து நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்க சரியான வாய்பை அது எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த நேரத்தில் ராணுவத்தில் புதிய ஆயுதம் இணைந்திருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
அதேபோல லடாக் போன்ற மிக உயரமான பகுதிகளில் ராணுவ வீரர்களுக்கு பக்க பலமாக இந்த ட்ரோன் ஏவுகணைகள் இருக்கும். லடாக்கில் சீனாவுடன் இந்தியா எல்லையை பகிர்ந்துக்கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் இருக்கும் இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஆயுதங்களை பயன்படுத்த மாட்டமார்கள். இந்த இடத்தில் திடீர் மோதல் ஏற்படுகிறது எனில், இந்த ட்ரோன்கள் பெரிய அளவுக்கு கை கொடுக்கும்.
இருப்பினும் இந்த ட்ரோன் ஏவுகணையில் சில சிக்கல்கள் இருக்கினறன. ட்ரோன்கள், விமானங்களை போல சைஸில் பெரியது கிடையாது. எனவே அதிக எடை கொண்ட் ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியாது. அப்படியெனில் ட்ரோன் மூலம் வீசப்படும் ஏவுகணைகள் குறைந்த அளவுக்கான சேதத்தையே ஏற்படுத்தும்.
மட்டுமல்லாது ஏவுகணை ஏவப்படும்போது வெளியாகும் வெப்பம் ட்ரோனை பாதிக்க கூடாது. ஜமார்கள் பயன்படுத்தும் இடங்களில் இந்த ட்ரோன்கள் தடையின்றி பறக்க வேண்டும். இவ்வளவு சிக்கலை கடந்துதான் DRDO சாதனை செய்திருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications