பாகிஸ்தான் பக்கத்துலயே வர முடியாது.. இரும்பு ராட்சசன்களை இறக்கும் இந்தியா! இனி அசைக்கவே முடியாது!
டெல்லி: கடற்படையை வலிமைப்படுத்தும் பிரான்சிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பில் 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான கொள்முதல் தொடர்பாக இருநாட்டு அரசுகளுக்கு இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும், ஒற்றை இருக்கை கொண்ட 22 ரஃபேல் போர் விமானங்கள், இரட்டை இருக்கைகள் கொண்ட 4 போர் விமானங்கள் இந்திய கடற்படைக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் திறனை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக போர் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் விட்டாலும் சீனா, பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகள் இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றன. இதை அடுத்து பாதுகாப்புத்துறையில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புக்காக அதிக அளவில் தளவாடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டு ட்ரோன்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவை அதிக அளவு கொள்முதல் செய்யப்படுகிறது.
அக்னி உள்ளிட்ட ஏவுகணைகள் சொந்த நாட்டிலேயே தயாரிக்கப்படும் நிலையில் சில போர் விமானங்களும் தயாரிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிநவீன போர் விமானங்கள், ஆயுதங்கள் வெளிநாடுகளில் இருந்தும் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் அரசிடமிருந்து கொள்முதல் செய்ய பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இம்மாத இறுதியில் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் செபாஸ்டின் லொர்கோஸ் இந்தியாவுக்கு வருகை தருகிறார். அப்போது இரு நாடுகளிடையே 26 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. தற்போது கொள்முதல் செய்யப்படும் 26 ரஃபேல் விமானங்களும் கடற் படை போர் விமானங்கள் ஆகும். இந்த 26 விமானங்களும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இயக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஐஎன்ஸ் விக்ராந்தில் மிக் 29கே ரக போர் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவை ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலுக்கு மாற்றப்பட இருக்கும் நிலையில் ஐஎன்எஸ் விக்ராந்தில் 26 ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மொத்தம் 63,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த 26 ரஃபேல் ரக போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அவற்றில் 22 போர் விமானங்கள் ஒற்றை இருக்கையுடனும் நான்கு ரபேல் கடற்படை விமானங்கள் இரண்டு இருக்கையுடனும் கொள்முதல் செய்யப்பட இருக்கின்றன.
அதில் பத்து விமானங்கள் நடுவானிலேயே எரிபொருளை நிரப்பும் திறனுடன் வடிவமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் பிரான்ஸ் அரசிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இந்தியா வந்தடைந்திருக்கின்றன.
அவை இந்திய விமானப்படையின் அம்பாலா மற்றும் ஹசிமாராவில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது கொள்முதல் செய்யப்படும் விமானங்கள் இந்தியாவுக்கு வந்தால் மொத்தம் 52 ரபேல் ரக போர் விமானங்கள் இந்திய அரசிடம் இருக்கும், இதன் மூலம் பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வசதியாக இருக்கும் எனவும், கப்பற்படையும் வலிமையானதாக மாறும் என்கின்றனர் பாதுகாப்பு நிபுணர்கள்.
-
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications