பாகிஸ்தானுக்குள் பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணை.. பேச்சுவார்த்தைக்கு ஓடி வந்த பாகிஸ்தான்.. வெளிவந்த தகவல்!
டெல்லி: பாகிஸ்தான் உடனான மோதலின் போது 4 விமான தளங்கள் உட்பட 8 ராணுவ பகுதிகளில் இந்தியா மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானின் முக்கிய பகுதிகளில் அட்டாக் செய்வதற்கு இந்தியா பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்து அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்றிரவு பாகிஸ்தான் ஒரு சில அத்துமீறல்களில் ஈடுபட்டிருந்தாலும், இரவு 10.30 மணிக்கு மேல் எந்தவிதமான தாக்குதலிலும் ஈடுபடவில்லை. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஜெய்சல்மார், பூஞ்ச் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அமைதி திரும்பியுள்ளது.

4 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக இரு நாடுகளும் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதில் முக்கிய பயங்கரவாதியான மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக தாக்குதலை தொடங்கியது. இதனை இந்தியா எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பு மூலமாக தடுத்து முறியடித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தானின் 4 விமான தளங்களில் இந்தியா மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இதனால் ஏற்பட்ட சேதமே பாகிஸ்தான் அவரச பேச்சுவார்த்தைக்கு ஓடி வர காரணமாக அமைந்தது.
அதிலும் ராவல்பிண்டியில் உள்ள நுர் கான் விமான தளம், முரித் விமான தளம், ரஃபிகி விமான ஏவுதளம் அதிக இழப்பதை சந்தித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் தாக்குதலின் போது இந்திய பாதுகாப்பு பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையிலும் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் 8 விமான தளங்களில் உட்பட 8 ராணுவ பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தி இருக்கிறது. அதில் இந்தியா பிரம்மோஸ் ஏவுகணையை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பிரம்மோஸ் ஏவுகணை மூலமாக 400 கிமீ தொலைவில் உள்ள இலக்கை கூட துல்லியமாக தாக்க முடியும். சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ்-ஐ, பாகிஸ்தான் மற்றும் சீனா வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications