வீரமரணம் அடைந்த முதல் அக்னிவீர்.. குடும்பத்துக்கு லட்சக்கணக்கில் நிவாரணம்! விரிவாக விளக்கிய ராணுவம்
டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்தில் ஒப்பந்த பணிக்கு சென்ற அக்னிவரர் நேற்று உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு அளிக்கப்படும் நிவாரண உதவிகள் தொடர்பாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்து இருக்கிறது.
மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த அக்னிபாத் ராணுவ ஆள் சேர்ப்பு திட்டத்தின் மூலம் அக்னிவீராக தேர்வு செய்யப்பட்ட கவாதே அக்ஷய் லட்சுமன் சியாச்சின் சிகரத்தில் நேற்று பணியின்போதே வீர மரணம் அடைந்தார். ராணுவ பணியின்போது உயிரிழந்த முதல் அக்னிவீர் அக்ஷய் லட்சுமன். இந்த உடலுக்கு நேற்று இந்திய ராணுவ மரியாதை கொடுத்தது. இந்த நிலையில் ராணுவ வீரர்கள் வீர மரணம் அடையும்போது அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணம்போல் அக்னிவீர்களுக்கு கிடைக்குமா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "இந்தியாவின் வீரர் உள்ளங்களை அவமதிப்பதற்காக கொண்டு வரப்பட்டதே இந்த அக்னிவீர் திட்டம். இதன் மூலம் பணியில் சேர்ந்த வீரமரணம் அடையும் வீரர்களுக்கு ஓய்வூதியம், நலத்திட்டங்கள், குடும்பங்களுக்கு நிவாரணம் என எதுவும் வழங்கப்படாது" என்று தெரிவித்தார். இதனை பாஜக மறுத்து விளக்கம் அளித்து இருந்தது.
இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பாகவும், அவரது குடும்பத்துக்கு அளிக்கப்படும் நிவாரணம் குறித்தும் இந்திய ராணுவம் தற்போது விளக்கம் அளித்து உள்ளது. அதில், "சியாச்சினில் பணியில் இருந்தபோது அக்னிவீர் (ஆபரேட்டர்) கவாதே அக்சய் லட்சுமன் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரின் துக்கத்தில் இந்திய ராணுவமும் பங்கெடுக்கிறது. அக்னிவீர் பணிக்கான ஒப்பந்தத்தில் பணியின்போது உயிரிழக்கும் வீரர்களுக்கு பங்களிப்பற்ற காப்பிட்டுத் தொகை ரூ.48 லட்சம் வழங்கப்படும்.

அக்னிவீரர்களுக்கான 30% சேவா நிதியுடன், அரசாங்கம் வழங்கும் நிவாரணம் மற்றும் அதற்கான வட்டி என ரூ.44 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். உயிரிழந்த நாளில் இருந்து அக்னீவீரரின் 4 ஆண்டுகால பணி ஒப்பந்தம் முடிவடையும் வரையிலான நிலுவைத் தொகை (ரூ.13 லட்சத்துக்கு மேல்) உடனடியாக வழங்கப்படும். ஆயுதப் படையினர் போரின்போது உயிரிழந்தால் வழங்கப்படும் விபத்துகளுக்கான நிதியிலிருந்து ரூ.8 லட்சம் வழங்கப்படும். ராணுவ மனைவிகள் நல சங்கம் எனப்படும் (AWWA) நிதியில் இருந்து ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications