ஹோட்டல் இல்லை.. உணவுக்கு கூட பணமில்லை.. தனித்து விடப்பட்ட சிந்து உள்ளிட்ட பேட்மிண்டன் நட்சத்திரங்கள்

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்கள் ஐரோப்பாவில் நடந்த இந்திய பேட்மிண்டன் தொடரில் பங்கேற்க சென்றிருந்த நிலையில், அங்கு தங்கவும் உணவுக்கும் கூட நிதி இல்லாமல் தவிர்த்துள்ளனர். கடைசி நேரத்தில் இந்திய விளையாட்டு ஆணையம் நிதி ஒதுக்காமல் போனதே இந்த சிக்கலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்களான பி.வி.சிந்து, லக்ஷ்யா சென் ஆகியோர் ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆனால், இந்த வெற்றிகளுக்கு பின்னால் இந்திய வீரர்கள் எதிர்கொண்ட நிதி நெருக்கடி நாம் யோசிக்க முடியாத அளவுக்கு மோசமானது.

Indian Badminton Players Faced Funding Crisis During European Tour Indian Badminton Players Badminton

என்ன நடந்தது

பின்லாந்து, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி என நான்கு நாடுகளில் நடைபெற்ற ஐரோப்பிய தொடரில் பங்கேற்க சென்ற இந்திய வீரர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் நிதி ஒதுக்கவில்லையாம். இதனால் பலர் தங்களது சொந்த பணத்திலேயே பயண செலவுகளை சமாளித்துள்ளனர். பிரபல ஆங்கில செய்தித்தாளான இந்தியன் எக்ஸ்பிரஸ் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது..

இந்திய பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் அக்டோபர் 6ம் தேதி தொடங்கிய பின்லாந்தின் வான்டாவில் ஆர்க்டிக் ஓபன் தொடரில் பங்கேற்க ரெடி ஆகிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த தொடர் ஆரம்பிக்க சில நாட்களுக்கு முன்புதான் இதற்கான நிதியை ஒதுக்க முடியாது என விளையாட்டு ஆணையம் வீரர்களுக்கு தெரிவித்துள்ளது. கடைசி நேரத்தில் இந்த தகவல் வந்ததால் வீரர்களால் மாற்று ஏற்பாடுகளை செய்ய கூட போதிய அவகாசம் கிடைக்கவில்லை.

நிதி கிடைக்கவில்லை

இந்த ஐரோப்பிய தொடரில் பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டி வரை முன்னேறிய சிந்து, நிதி கிடைக்கவில்லை என்று தெரிந்தபோது அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். சில செலவுகளை தனது சொந்த பணத்திலும், தனக்கு ஆதரவளிக்கும் ஒலிம்பிக் கோல்ட் குவெஸ்ட் அமைப்பின் உதவியுடனும் சமாளித்ததாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும், "நிதி கிடைக்கவில்லை என்று தெரிந்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதுபோன்ற சூழலை இதற்கு முன்பு நான் சந்தித்ததில்லை. ஆனால், நிதி இல்லை என்பதற்காக போட்டியில் பங்கேற்காமல் இருக்க முடியாது. விளையாடுவது, எனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தினேன்" என்று தெரிவித்துள்ளார்.

வீரர்களே செலவுகளை ஏற்கணும்

இந்த தொடரில் வீரர்களின் விமான பயணம், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளை அவர்களே ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டிக்கு தங்குமிடத்தை ஏற்பாடு செய்வதாக இந்திய பேட்மிண்டன் சங்கம் தெரிவித்திருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளுக்கான செலவுகளை வீரர்களே கவனிக்க வேண்டியிருந்தது.

நிதி சிக்கலின் தாக்கம் போட்டிகளிலும் எதிரொலித்தது. சில வீரர்களால் தங்களது பயிற்சியாளர்களை உடன் அழைத்துச் செல்ல முடியவில்லை. பிரெஞ்சு ஓபனில் உலகின் 3ம் நிலை வீராங்கனை அகானே யமாகுச்சியை வீழ்த்திய அஸ்மிதா சாலிஹாவுக்கு, சக வீராங்கனை இஷாராணி பருவா தான் போட்டியின்போது உதவினார். பயிற்சியாளரை அவரால் உடன் அழைத்து செல்ல முடியவில்லை. டென்மார்க் ஓபனில் தன்வி சர்மாவும் பயிற்சியாளர் இல்லாமலேயே விளையாடினார்.

விளக்கம்

பேட்மிண்டன் வீரர்களுக்கு திடீரென ஏன் நிதி நிறுத்தப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. ஆனால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு காரணமாக நிதி நிறுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 2014க்கு பிறகு முதல்முறையாக ஆசிய போட்டியில் பேட்மிண்டன் தனிநபர் பிரிவில் இந்தியா பதக்கம் எதையும் வெல்லவில்லை. நிதி நிறுத்தப்பட இது காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியானது.

இருப்பினும், இதற்கும் நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டதற்கும் தொடர்பில்லை என மூத்த விளையாட்டு ஆணைய அதிகாரி மறுத்துள்ளார். போட்டிக்கு 30 நாட்களுக்கு முன்பே வீரர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களுடன் நிதிக்கான முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும். இந்திய பேட்மிண்டன் சங்கம் உரிய காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்காததே நிதி விடுவிக்கப்படாததற்குக் காரணம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். அடுத்து வரும் போட்டிகளுக்கான நிதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதேநேரம் ஐரோப்பிய தொடரில் வீரர்கள் சொந்தமாக செலவிட்ட தொகை திருப்பி வழங்க முடியாது எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

சிறப்பான ஆட்டம்

நிதி இல்லை.. பயிற்சியாளர் இல்லை.. ஹோட்டல், உணவு கூட சொந்த காசில் தான் சமாளிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் கூட இந்திய வீரர்கள் இந்த ஐரோப்பிய தொடரில் சிறப்பாக செயல்பட்டனர். அஸ்மிதா சாலிஹா யமாகுச்சியை வீழ்த்தியதுடன், அன்மோல் கர்ப் ஹைலோ ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறினார். அதேபோல லக்ஷ்யா சென் ஓராண்டுக்கு பிறகு பட்டம் வென்றார். சிந்து இந்த ஆண்டின் இரண்டாவது பட்டத்தைக் கைப்பற்றினார். 2017க்கு பிறகு ஒரே ஆண்டில் இரண்டு BWF பட்டங்களை சிந்து வெல்வது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் அவர் உலக தரவரிசையிலும் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+