டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ஜெட்டில் "முக்கிய" அறிவிப்பு.. அடையாள ஆவணம் ஆகும் பான் கார்டு.. நிதி பரிவர்த்தனைக்கு கட்டாயம்!

நாடு முழுவதும் எந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற திட்டம் மேற்கொள்ளப்படும் என்ற முக்கிய அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: பான் கார்டு அடையாள ஆவணமாக மாற்ற மத்திய அரசு திட்டம். நிதி பரிவர்த்தனைக்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட உள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டார்.

2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல முக்கிய அறிவிப்புகளை இன்று அவர் பட்ஜெட்டில் வெளியிட்டார்.

விவசாயிகளுக்கான அறிவிப்புகள் தொடங்கி வட்டி இல்லா கடன் வரை பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா? இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா?

பட்ஜெட்

பட்ஜெட்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு, இயற்கை விவசாயத்தில் 1 கோடி விவசாயிகளை ஈடுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. 63,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்கள் கணினிமயமாக்கப்படும். பயோ மின் திட்டங்களுக்கு ரூ10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நாடு முழுவதும் எந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற திட்டம் மேற்கொள்ளப்படும். தோட்ட கலைத்துறைக்கு ரூ2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மாநில அரசுகளுக்கான வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்யப்படும்.

பான்கார்ட்

பான்கார்ட்

குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். வேளாண் கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும். பான் கார்டு அடையாள ஆவணமாக மாற்ற மத்திய அரசு திட்டம். நிதி பரிவர்த்தனைக்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட உள்ளது. அதாவது தற்போது ஆதார் கார்ட் போன்றவை எப்படி அடையாள அட்டையாக இருக்கிறதோ அது போல பண பரிவர்த்தனைக்கு பான் கார்ட் அவசியம் ஆகிறது. இதன் மூலம் அதிக அளவிலான பண பரிவர்த்தனைகளை எளிதாக கண்காணிக்க முடியும்.

வட்டி இல்லா கடன்

வட்டி இல்லா கடன்

50 ஆண்டுகள் வரை மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.கடலோர பகுதிகளை இணைப்பதற்கான படகு போக்குவரத்து திட்டம் உருவாக்கப்படும். காலாவதியான பழைய வாகனங்களை மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நாடு முழுவதும் 30 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். 63,000 வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்படும். இயற்கை விவசாயத்தில் 1 கோடி விவசாயிகளை ஈடுபடுத்த இலக்கு மேற்கொள்ளப்படும். மின்னணு நீதிமன்றங்கள் அமைக்க ரூ7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 புதிய இயந்திரங்கள்

புதிய இயந்திரங்கள்

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தெரிவித்துள்ளார். இந்தியா இவ்வளவு வளர்ந்த போதும் இன்னும் இந்த முறை மட்டும் வழக்கத்தில் உள்ளது. இதை அழிக்க தமிழ்நாடு, கேரளா அரசு உட்பட பல்வேறு மாநில அரசுகள் திட்டங்களை கொண்டு வந்தன. ஆனால் தேசிய அளவில் இதற்கான திட்டங்கள் அமலில் இல்லை. தேசிய அளவில் இதற்காக கருவிகள் வாங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் அது தொடர்பான அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ளார். நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ10,000 கோடி நிதி ஒதுக்கீடு என்று நிதி அமைச்சர் தனது பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டார்.

English summary
Indian Budget 2023-24: Pan card will became an identity card for transactions says Finance minister Nirmala Sitharaman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X