"3 கேள்விகள்.. 30 நொடிகளில் விசா நிராகரிப்பு.." இந்திய இளைஞரின் அமெரிக்க கனவு தகர்ந்தது! என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல விரும்பியிருக்கிறார். இருப்பினும், வெறும் 30 நொடிகளில் அவரது அமெரிக்க விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார், இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

டிரம்ப் வந்த பிறகு அமெரிக்க விசாவுக்கான கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. வெளிநாட்டினர் அமெரிக்கா செல்வது சிரமமானதாக மாறியுள்ளது. இதற்கிடையே அமெரிக்கா செல்லவிரும்பிய இந்தியர் ஒருவரின் கனவு 30 வினாடிகளில் தகர்ந்துள்ளது. இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் தனக்கு நேர்ந்ததை ரெட்டிட் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Indian Man s US Visa Rejected in 40 Seconds After Honest Reply to Consular Question

இந்தியருக்கு விசா மறுப்பு

அதாவது அமெரிக்கா செல்ல அவர் B1/B2 விசா (சுற்றுலா அல்லது குறுகிய பிஸ்னஸ் டிரிப்) கோரி அவர் விண்ணப்பித்துள்ளார். நேர்காணலின்போது அவரிடம் மொத்தமே 3 கேள்விகள் மட்டும் தான் கேட்கப்பட்டதாம். அதற்கு நேர்மையாகப் பதிலளித்ததாகவும் இருப்பினும் 30 நொடிகளில் தனது அமெரிக்கக் கனவு தகர்ந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு நேர்ந்த சம்பவத்தை ஆன்லைனில் பகிர்ந்த அந்த நபர், நெட்டிசன்களிடம் இது குறித்து அட்வைஸ் கேட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் விசா நேர்காணலுக்கு அவர் சென்றாராம். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சமீபத்தில் அமெரிக்கத் தூதரகத்தில் எனது B1/B2 விசா நேர்காணல் இருந்தது. மூன்று கேள்விகளை மட்டுமே கேட்டனர். வெறும் ஒரு நிமிடத்திற்குள் எனது விசாவை நிராகரித்துவிட்டனர். என்ன தவறு நடந்தது, அடுத்த முறை எப்படி நடந்து கொள்ள வேண்டும்" எனக் கேட்டுள்ளார்.

சுற்றுலா திட்டம்

அமெரிக்காவில் உள்ள டிஸ்னி வேர்ல்ட், யுனிவர்சல் ஸ்டுடியோஸ், கென்னடி ஸ்பேஸ் சென்டர் உள்ளிட்ட உள்ளூர் சுற்றுலாத் தலங்கள் செல்ல இரண்டு வாரங்கள் புளோரிடா செல்லத் திட்டமிட்டுள்ளார். இதற்கான விசா நேர்காணலின் போது தன்னிடம் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நீங்கள் ஏன் அமெரிக்காவிற்குப் பயணம் செல்கிறீர்கள்? நீங்கள் இதற்கு முன்பு இந்தியாவிற்கு வெளியே பயணம் செய்திருக்கிறீர்களா? உங்களுக்கு அமெரிக்காவில் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா?" ஆகிய 3 கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

அந்த நபர் மூன்றுக்கும் நேர்மையாகப் பதிலளித்ததாகப் பதிவிட்டுள்ளார். அதாவது தனது விடுமுறையைக் கழிக்க புளோரிடா செல்வதாகக் குறிப்பிட்ட அந்த நபர், இதற்கு முன்பு சர்வதேச பயண அனுபவம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார். அதேநேரம் புளோரிடாவில் தனது கேர்ள் பிரண்டு வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்தப் பதில்களைக் கேட்ட அடுத்த நொடியே அமெரிக்கத் தூதரக அதிகாரி விசாவை மறுத்துவிட்டாராம்.

மொத்தம் 3 கேள்விகள்

அவர் மேலும் கூறுகையில், "நான் சுற்றுலா செல்லவே அந்த டிரிப்பை திட்டமிட்டேன். மேலும், என் காதலி புளோரிடாவில் வசிப்பதால் அங்கு போகலாம் என முடிவு செய்தேன். 2 வாரங்கள் மட்டுமே இருந்து கொடும் திரும்பலாம் என்றே திட்டமிட்டேன். ஆனால், விசா விண்ணப்பத்தை நொடிகளில் நிராகரித்துவிட்டனர். இதற்கு என்ன காரணம்! நான் நேர்மையாகப் பதிலளித்தது தவறா! வேறு என்ன சொல்லியிருக்க வேண்டும்! அடுத்த முறை நேர்காணலுக்குச் செல்லும்போது நான் என்ன செய்ய வேண்டும்" என கேட்டிருந்தார்.

நெட்டிசன்கள் விளக்கம்

இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு பதில்களைக் கூறி வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், "விசா நிராகரிப்புக்கு நீங்கள் ஒரு கிளாசிக் எடுத்துக்காட்டு. நீங்கள் இதற்கு முன்பு இந்தியாவுக்கு வெளியே சென்றதில்லை. உங்கள் கேர்ள் பிரண்ட் வேறு அமெரிக்காவில் இருக்கிறார். இதுவே போதுமான காரணம்" என்றார். மற்றொரு நபர், "நீங்கள் உங்கள் கேர்ள் பிரண்ட் குறித்துப் பற்றி நேர்மையாகக் குறிப்பிட்டீர்கள்... ஆனால் தூதரக அதிகாரி பார்வையில் நீங்கள் அமெரிக்காவில் நிரந்தரமாகச் சட்டவிரோதமாகத் தங்கிவிடுவீர்கள் என்றே நினைப்பார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+