டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்பீடு எடுக்கும் ரயில்வே.. நிமிடத்திற்கு 25 ஆயிரம்.. இனி 25 லட்சம்.. இ-டிக்கெட் விநியோகத்தில் அதிரடி

இந்த வசிதியானது இந்த ஆண்டு செப்டம்பருக்குள் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்த ஆண்டு முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது அதிகரிக்கும் என்று இரயில்வே துறை அமைச்சகம் கூறியுள்ளது. தற்போது வரை நிமிடத்திற்கு 25,000 டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். இந்த வசிதி இந்த ஆண்டு அப்டேட் ஆகிறது.

உலகில் மிகப் பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ரயில்வே நாளொன்றுக்கு சுமார் 13,169 பயணிகள் ரயில்களையும் 8,479 சரக்கு ரயில்களையும் இயக்குகிறது. இந்த ரயில்கள் மொத்தமாக நாடு முழுவதும் சுமார் 68,103 கி.மீ தொலைவுக்கு பயணிக்கின்றன. பயணிகளில் ரயில் ஒரு நாளைக்கு 23 கோடி பேரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது.

இந்நிலையில் இந்தியன் ரயில்வேயில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 25 ஆயிரம் டிக்கெட்களை விற்று வருகிறது. ஆனால் இது போதுமானதாக இருப்பதில்லை என்கிற புகார் அடிக்கடி மேலெழுகிறது. குறிப்பாக பண்டிகை நாட்டிகளில் இந்த வேகம் போதுமானதாக இருப்பதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. எனவே ரயில் டிக்கெட் புக்கிங்கின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. அதன்படி சில முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

ரயில் திட்டங்களில் தமிழ்நாடு புறக்கணிப்பு.. 'பிங்க் புக்’கை குறிப்பிட்டு சு.வெங்கடேசன் கண்டனம்! ரயில் திட்டங்களில் தமிழ்நாடு புறக்கணிப்பு.. 'பிங்க் புக்’கை குறிப்பிட்டு சு.வெங்கடேசன் கண்டனம்!

பேக் - என்ட்

பேக் - என்ட்

இது குறித்து ரயில்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறுகையில், "ரயில்வே நிர்வாகம் இ-டிக்கெட்டிங்கில் தனது பேக்-என்ட் (backend) சிஸ்டத்தை பலப்படுத்தி வருகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் சிஸ்டத்தில் நிமிடத்திற்கு 25 ஆயிரம் டிக்கெட்களை பெற முடியும். ஆனால் இனி வரவுள்ள அப்டேட்டில் நிமிடத்திற்கு சுமார் 25 லட்சம் டிக்கெட்களை பெறலாம். டிக்கெட் விநியோகம், மற்றும் விசாரணை அமைப்பு 10 மடங்கு பலப்படுத்தப்படுவதே எங்கள் இலக்கு. எந்தெந்த ரயில் எந்த வழியாக எந்த நேரத்திற்கு சென்று சேரும் என்று தேடுபவர்களின் எண்ணிக்கையானது தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.

4 லட்சம் டூ 40 லட்சம்

4 லட்சம் டூ 40 லட்சம்

அதன்படி நிமிடத்திற்கு சுமார் 4 லட்சம் ரிசல்ட்களைதான் தற்போதுவரை வழங்கி வருகிறோம். ஆனால் இனி இது நிமிடத்திற்கு 40 லட்சம் என்று அதிகரிக்கப்படும். அதேபோல இ-டிக்கெட்களை இணைய வழியாகதான் பெறமுடியும் என்பதால் இணைய பாதுகாப்பையும் நாங்கள் அதிகரித்து வருகிறோம். பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது 2023-2024ம் ஆண்டின் ரயில்வே துறையின் முக்கிய இலக்காகும். அதேபோல நாடு முழுவதும் 2,000 ரயில் நிலையங்களில் ஜன் சுவிதா எனப்படும் பொதுக்கடைகளை உருவாக்குவதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

நிதி

நிதி

ரயில்வே துறையின் இ-டிக்கெட் விற்பனையின் புதிய அப்டேட் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். பட்ஜெட்டில் கடந்த 10 ஆண்டை விட தற்போது 9 மடங்கு அதிகமாக ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு மட்டும் ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நாடு முழுவதும் சுமார் 75 வந்தே பாரத் ரயில்களையும், 200 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களையும் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

உட்கட்டமைப்பு

உட்கட்டமைப்பு


அதேபோல ரயில்வே உள்கட்டமைப்பின் நெருக்கடியை எதிர்வரும் 2024-2025ம் ஆண்டுக்குள் சுமார் 51% அளவுக்கு குறைத்திடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இந்த புதிய மாற்றத்திற்கு ஏற்பவாறு இ-டிக்கெட் முன்பதிவு வசதி முறைகளையும் மத்திய அரசு மாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Ministry of Railways has said that the booking of train tickets will increase from this year. As of now, 25,000 tickets can be booked per minute. This facility is being updated this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X