Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெடிக்கும் போர்? வலுத்த மோதலால் ஈரான் - இஸ்ரேலுக்கு யாரும் போகாதீங்க.. வெளியுறவுத்துறை ‛அட்வைஸ்’

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காசா போருக்கு மத்தியில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் தான் இந்தியர்கள் யாரும் ஈரான் மற்றும் இஸ்ரேல் செல்ல வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை முக்கிய அறிவுரை வழங்கி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு போரை தொடங்கியது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போருக்கு எல்லை பிரச்சனை தான் காரணம். அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவுக்கும் இடையே போர் தொடங்கியது. இந்த போரும் தொடர்ந்து வருகிறது.

Indians should avoid travel to Iran or Israel till further notice Ministry of external affairs advices


இந்த 2 போரிலும் பல ஆயிரம் மக்கள், படை வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பெருமளவு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகள் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வலியுறுத்தி வருகிறது. ஆனால் யாரும் செவிசாய்க்கவில்லை.

இத்தகைய சூழலில் தான் அடுத்ததாக இஸ்ரேல் - ஈரான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அதாவது காசா மீது இஸ்ரேல் போர் தொடங்கியபோதே ஈரான் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ஈரான் ஆதரவில் லெபனான் நாட்டில் செயல்படும் அமைப்பை சேர்ந்தவர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

வெடிக்க தயாராகும் மத்திய கிழக்கு! ஈரானை சமாதானப்படுத்த அமெரிக்கா முயற்சி! சீனாவுடன் பேச்சுவார்த்தை


இந்த மோதல் என்பது தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் ராணுவ மையங்களைக் குறிவைத்து 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் டஜன் கணக்கான ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் தொடுக்க ஈரான் திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதற்கு இஸ்ரேல், ‛‛ஈரான் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், நாங்களும் பதிலுக்கு திருப்பி தாக்குவோம். யாருக்கும் அஞ்சமாட்டோம்’’ என தெரிவித்துள்ளது. இதனால் இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் வலுத்து போர் மேகம் சூழ்ந்துள்ளது. மேலும் எப்போது வேண்டுமானாலும் இருநாடுகள் தாக்குதல், பதில் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் இந்திய வெளியுறவுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‛இஸ்ரேல், ஈரான் பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்தியர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை ஈரான் அல்லது இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம். அதேவேளையில் ஈரான், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் உடனே இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி பாதுகாப்பாக இருப்பதோடு, பாதுகாப்புக்க தேவையான முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+