தொங்கலில் விடப்பட்ட இந்திய ஆட்டோமொபைல் துறை.. இழுத்தடிக்கும் சீனா! தீர்வு எப்போது?
டெல்லி: ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான அரிய வகை கனிமங்கள் சப்ளையை கேட்டு பெறுவதற்காக, இந்திய ஆட்டோமொபைல் துறை தலைவர்கள் சீனாவுக்கு பயணப்பட இருந்தனர். ஆனால் இதற்கு சீனா தரப்பில் இன்னும் ஒத்துழைப்பு கொடுக்கப்படாததால், இந்த பயணம் தள்ளி போய் உள்ளது. எனவே, இந்திய ஆட்டோமொபைல் துறை நெருக்கடியை சந்தித்திருக்கிறது.
ஆட்டோமொபைல் துறைக்கு சீனாவின் அரிய கனிமங்களும், காந்தங்களும் அவசியமாகும். இது பூமியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகிறது என்பதால் இதற்கு அரிய கனிமங்கள் என்று பெயர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதனை ஏற்றுமதி செய்வதை சீனா நிறுத்தி வைத்திருக்கிறது. எனவே உலகம் முழுவதும் உள்ள ஆட்டோமொபைல்துறை அடிவாங்கியுள்ளது. சர்வதேச அளவில் பாதிப்புகள் இருக்கும்போது, இந்தியா மட்டும் தப்பி விடுமா? ஆக இந்திய ஆட்டோமொபைல் துறைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவுக்கான ஏற்றுமதியை மீண்டும் தொடங்க சீனாவுடன் இந்திய ஆட்டோமொபைல் துறையை சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை என்பதால் சிக்கல் நீடிக்கிறது.
ஒத்துழைக்காத சீனா
இந்த விகாரம் குறித்து சீன அதிகாரிகளுடன் பேச, சுமார் 40-50 இந்தியத் தொழில் துறை நிர்வாகிகள் கடந்த மாதம் சீனாவுக்கு போக விசாக்களை பெற்றிருந்தனர். ஆனால் சீன அதிகாரிகள் நேரம் ஒதுக்காததால் இந்த சந்திப்பு இன்னும் நடக்காமல் இருக்கிறது. "சீன அதிகாரிகள் இதுவரை எந்தச் சந்திப்புக்கும் அனுமதி வழங்கவில்லை. அதனால், குழு இன்னும் புறப்படவில்லை. இதுவரை ஒரு லைசென்ஸ் கூட எங்களுக்கு வழங்கப்படாததால் நிலைமை மோசமாக உள்ளது" என்று தொழில் துறை நிர்வாகிகள் குழுவினர் கூறியுள்ளனர்.
வாகன உற்பத்தியில் பின்னடைவு
இதே நிலைமை நீடிக்கும்பட்சத்தில் உள்நாட்டு வாகனத் துறையில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்றும், இதனால் உற்பத்தி இழப்புகள் கணிசமாக அதிகரிக்கும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.
சமாரியம், கடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம் மற்றும் லுடேஷியம் போன்ற முக்கியமான கனிமங்களை பூமியிலிருந்து எடுத்து தரம் பிரித்து உலக அளவில் சீனா ஏற்றுமதி செய்து வருகிறது. இது ரொம்பவும் தலைவலி பிடித்த வேலை. அரிய கனிமங்களை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதை பத்திரமாக அகழ்ந்து எடுக்க வேண்டும். எடுத்ததை தூய்மைப்படுத்தி, கனிமத்தை தனியாகவும் மண்ணை தனியாகவும் பிரிக்க வேண்டும். இந்த செயல்முறையில் வெளியேற்றப்படும் கழிவுகள் மிக ஆபத்தானவை. இறுதியாக கனிமங்களும் காந்தங்களும் கிடைக்கும்.
அரிய கனிமங்கள்
இப்படி கிடைக்கும் கனிமங்களும், காந்தங்களும் பொருட்கள் மின் மோட்டார்கள், பிரேக்கிங் சிஸ்டம்கள், இதர ஆட்டோமொபைல் தேவைகளுக்கும், ஸ்மார்ட்போன்கள், ஏவுகணை தொழில்நுட்பம், வீட்டு உபகரணங்கள் மற்றும் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பத்திலும் பயன்படுத்தப்படுகிறது. மிக குறிப்பாக மின்சார வாகனங்களில் இந்த அரிய வகை காந்தங்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இது இல்லையெனில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முடியாது.
இந்தியாவின் டிமாண்ட்
கடந்த ஆண்டில் 540 டன் அளவுக்கு இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த கனிமங்களையும், காந்தங்களையும் வாங்கியிருக்கின்றன. இந்த கொள்முதலில் 80% சீனாவிடமிருந்துதான் நடந்திருக்கிறது. இப்போது திடீரென சப்ளை நின்றுபோனதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தள்ளாடி வருகின்றன.
மாருதி சுசுகி
மஹிந்திரா & மஹிந்திரா
டாடா மோட்டார்ஸ்
பஜாஜ் ஆட்டோ
டிவிஎஸ் மோட்டார்
ஹூண்டாய்
கியா
ஹீரோ மோட்டோகார்ப்
ஆகிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. ஜூலை மாத இறுதிக்குள் சீனா அரிய காந்தங்களையும், கனிமங்களையும் கொடுக்கவில்லை எனில், ஆகஸ்ட் மாதத்தில் முழு உற்பத்தியும் நிறுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications