டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லடாக்,,,பாங்காங் டிசோ... பகுதிகளில் இந்திய திபெத் படை... தேசியக்கொடி ஏற்றி... முழக்கம்!!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய திபெத் எல்லையில் லடாக்கில் 17,000 அடி உயரத்தில் இந்திய திபெத் எல்லைப் படையினர் 74 சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றி கொண்டாடினர். அப்போது கையில் கொடி பிடித்து ஒரு ராணுவ வீரர் முன்னே செல்ல மற்றவர்கள் பின்னே பாரத் மாதா கி ஜே என்ற குரல் எழுப்பிச் சென்றனர்.

Recommended Video

    லடாக்கில் இந்தியக் கொடி ஏற்றிய இந்தோ-திபெத் ராணுவ வீரர்கள்

    நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த சுதந்திரமாக, பாதுகாப்பாக, கவுரமாக கருதி கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி உரையாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக ராஜ் காட்டில் இருக்கும் மகாத்மா காந்தியின் நினைவு இடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    Indo-Tibetan Border Police (ITBP) jawans celebrate #IndependenceDay at an altitude of 16,000 feet in Ladakh

    இதன் பின்னர், செங்கோட்டைக்கு வந்து ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தற்போது செங்கோட்டையில் இருக்கும் கோட்டை கொத்தளத்தில் பேசி வருகிறார். இவரது பேச்சு பெரும்பாலும் சுயசார்பு இந்தியாவை பற்றியதாகத்தான் இருக்கிறது. குறிப்பாக விவசாயிகளின் குறைகளை குறித்து பேசி வருகிறார். விவசாயிகளின் செலவுகளைக் குறைத்து அவர்களது வருமானத்தை இரட்டிப்பாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது என்றார். புதிய கல்விக் கொள்கை குறித்தும் பேசி வருகிறார்.

    Indo-Tibetan Border Police (ITBP) jawans celebrate #IndependenceDay at an altitude of 16,000 feet in Ladakh

    இந்த நிலையில் சமீபத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் சிக்கலுக்கு உள்ளான லடாக் மற்றும் பாங்காங் டிசோ ஆகிய பகுதிகளில் தேசியக் கொடி ஏற்றிய இந்திய திபெத் எல்லைப் படையினர், கொடிக்கு வீரவணக்கம் செலுத்தி, பாரத் மாதா கி ஜே என்ற குரல் எழுப்பினர். பாங்காங் டிசோ பகுதி கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் இருக்கிறது.

    Indo-Tibetan Border Police (ITBP) jawans celebrate #IndependenceDay at an altitude of 16,000 feet in Ladakh

    இந்தப் பகுதிகளில் தான் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இன்னும் எல்லையில் சில இடங்களில் சீனா ஆக்கிரமிப்பு செய்து இருக்கும் நிலையில், முக்கிய இடங்களில் இந்திய திபெத் எல்லைப் படையினர் இந்திய தேசியக் கொடியை ஏற்றி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாங்காங் டிசோ பகுதியிலும் தேசியக் கோடி ஏற்றினர். பாங்காங் டிசோ பகுதி கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் இருக்கிறது.

    பன்முகத் தன்மை இந்தியாவின் பலம்.. நமது ஒற்றுமை உலகிற்கு பாடம்.. சுதந்திர தின உரையில் மோடி புகழாரம் பன்முகத் தன்மை இந்தியாவின் பலம்.. நமது ஒற்றுமை உலகிற்கு பாடம்.. சுதந்திர தின உரையில் மோடி புகழாரம்

    English summary
    Indo-Tibetan Border Police (ITBP) jawans celebrate #IndependenceDay at an altitude of 16,000 feet in Ladakh
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X