• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஏழைகளுக்கு ரூ.2500, ஜிஎஸ்டி, வருமான வரி தள்ளுபடி.. தொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பு இவைதான்

|

டெல்லி: தொழில் நிறுவனங்கள் படிப்படியாக புத்துயிர் பெறுவதற்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ஆத்மநிர்பர் கொரோனோ வைரஸ் லாக்டவுன் பேக்கேஜ் அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் தற்போது உள்ள அசாதாரண சூழ்நிலைகளின் அடிப்படையில் தேவையை உருவாக்குவதற்கு அரசாங்கம் இன்னும் அதிகமான அளவு நிதி சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்று பலர் கருதுகின்றனர்.

ஒரு தேசிய வர்த்தக அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் பதில் அளித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சொன்ன பதில்., அரசு அதிக நிதியை மக்களுக்கு ஒதுக்க வேண்டும், நுகர்வோருக்கு நேரடி பணப்பரிமாற்றத்தை அளிக்க வேண்டும். வரிகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும் இதை தவிர வேறு சிறந்த வழிகள் இருக்க முடியாது என்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. பொதுமக்கள் கடும் இன்னலை சந்தித்தனர். இந்த வைரஸ் தொற்று பாதிப்பு இன்று வரை குறையவில்லை. எனினும் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பெரிய அளவில் உயிரிழப்புகளோ, பாதிப்போ ஏற்படவில்லை.

கொரோனாவுக்கு பதஞ்சலியின் மருந்தா?.. யார் அனுமதி கொடுத்தது?.. வலுக்கும் எதிர்ப்பு

தொழில் நிறுவனங்கள்

தொழில் நிறுவனங்கள்

இந்த சூழலில் மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்படுத்திய மத்திய அரசு, அதேநேரம் பொருளாதாரத்தை திறக்க படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இந்த தளர்வுக்கு பின்னர் திறக்கப்பட்ட நிறுவனங்களிடம் தேசிய அளவில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, பெரிய நிறுவனங்கள், பிராந்திய வர்த்தக அமைப்புகள் மற்றும் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உள்ள சில சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடமே இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

80 சதவீதம் செயல்படுகின்றன

80 சதவீதம் செயல்படுகின்றன

அவர்கள் தெரிவித்த சில கருத்துக்களை பார்ப்போம். பெரிய நிறுவனங்கள் அதிக திறன் உடன் செயல்படுகின்றன. ஒரே அல்லது தொடர்புடைய துறைகளில் நடுத்தர மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்கள் ஓரளவு இயங்குகின்றன. வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அல்லது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வேகமாக செயல்பட முடிந்துள்ளது,. அவை 80 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட திறனுடன் இயக்குகின்றன.

ஏன் நிறுத்தம்

ஏன் நிறுத்தம்

வாகன ஷோரும்களில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய வாகன உற்பத்தியை மீண்டும் மறுதொடக்கம் செய்வதில் தாமதித்து வருகின்றன., அநேகமாக வேலைவாய்ப்பில் நிச்சயமற்ற தன்மை மற்றும் ஊதியக் குறைப்பு காரணமாக நுகர்வோர் மீதான மன அழுத்தம் போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம். வட மாநிலங்களில் ஆட்டோமொபைல் துறை யூனிட்டுகள் முன்பே தொடங்கிவிட்டன. ஆனால் நாட்டின தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் இன்னும் செயல்பாடுகள் இல்லை. கொரோனா காரணமாக தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் முடங்கி உள்ளது.

பயனற்றது பேக்கேஜ்

பயனற்றது பேக்கேஜ்

பெரும்பாலான நிறுவனங்கள் மத்திய அரசின் பொருளாதார பேக்கேஜ் தங்களுக்கு பயனளிக்கவில்லை என்று கூறின. பலர் இது பயனற்றது என்றார்கள் மேலும் சிலர் தொழில்துறையினருக்கோ அல்லது ஏழைகளுக்கோ நிதி உதவி குறைவாக இருப்பதாகக் கூறினார்கள்.

ஜிஎஸ்டி தள்ளுபடி

ஜிஎஸ்டி தள்ளுபடி

ஏழைகளுக்கு ரூ .2,500 நேரடி பணப்பரிமாற்றம், உழைப்புக்கு ஊதிய ஆதரவு, ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி தள்ளுபடி போன்ற பரிந்துரைகள் செய்திருக்கலாம் என்று சிலர் கூறினர்கள். உற்பத்தித் துறைக்குள், மருந்து அலகுகள் 85 சதவீதத்திற்கும் அதிகமான திறன் கொண்டு இயங்குகின்றன. கெமிக்கல் நிறுவனங்கள் பின்தங்கி உள்ளன. சேவை துறையில், மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் 90 சதவீத திறனில் செயல்படுகின்றன.

மூலபொருள் உற்பத்தி

மூலபொருள் உற்பத்தி

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு மென்பொருள் நிறுவனம் 95 சதவிதம் இயங்குவதாக கூறியது. அதே நேரத்தில் மற்ற சிறிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு தீர்வுகளில் ஈடுபட்டுள்ள ஒரு நடுத்தர நிறுவனங்கள், 50 சதவீத அளவில் இயங்குவதாக கூறின. சுரங்க மற்றும் எஃகு போன்ற தொழில்களில் உள்ள முக்கிய துறை நிறுவனங்கள் லாக்டவுன் காலத்தில் கூட செயல்பட்டன.

செக்யூரிட்டி வேலையும் காலி

செக்யூரிட்டி வேலையும் காலி

மூலதன பொருட்கள் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களும் லாக்டவுனிலும் இயங்குகின்றன, ஆனால் குறைந்த அளவிலேயே இயங்குகின்றன. மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய மூலதன பொருட்கள் நிறுவனம் 37 சதவீதம் அளவில்தான் உள்ளதாக கூறியது., ஆனால் பெங்களூருவைச் சேர்ந்த அரசுக்குச் சொந்தமான மூல பொருட்கள் உற்பத்தி நிறுவனம் 75 சதவீத அளவில் இயங்குகிறதாம். நிறுவனங்களுக்கு செக்யூரிட்டி வேலைகளை வழங்கும் குர்கானை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம், தேசிய அளவில் சுமார் 50 சதவீதம் ஊழியர்கள் தான் பணியில் நிறுத்தியதாக கூறியது. நாடு முழுவதும் உற்பத்தி துறை மற்றும் சேவை துறை பெரும் சரிவினை சந்தித்திருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

 
 
 
English summary
announcement of the Rs 20 lakh crore AtmaNirbhar Covid economic package not much help, companies are of the view that the government needs to do a lot more heavy lifting to generate demand given the extraordinary circumstances.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X