டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படவில்லை.. சர்வதேச ஊடக செய்திக்கு.. மத்திய அரசு பதிலடி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா மரணங்கள் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறைத்து காட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான தி எக்கனாமிஸ்ட் (The Economist) செய்தி வெளியிட்டு இருந்தது. அதாவது இந்தியாவில் அரசு வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ மரண எண்ணிக்கையை விட உண்மையான பலி எண்ணிக்கை 5-7 மடங்கு அதிகம் இருக்கும் என அந்த ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தது.

அதோடு இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளதாகவும், இதை அரசு பதிவு செய்யவில்லை என்றும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்திக்கு தற்போது மத்திய அரசு தி எக்கனாமிஸ்ட் பெயரை குறிப்பிடாமல் பதில் அளித்துள்ளது.

 என்ன

என்ன

மத்திய அரசு தனது பதிலில், இந்தியாவில் கொரோனா மரணம் 5-7 மடங்கு அதிகம் இருக்கலாம் என்று வெளியாகி இருக்கும் செய்தி தவறானது. இது ஆதாரபூர்வமற்ற செய்தி. முழுக்க முழுக்க யூகங்களின் அடிப்படையில் இந்த கட்டுரையை எழுதி உள்ளனர். நிரூபிக்கப்படாத ஆராய்ச்சிகளை மேற்கோள்காட்டி, எந்த விதமான பெருந்தொற்று ஆதாரங்களை சமர்பிக்காமல் இந்த கட்டுரையை எழுதி உள்ளனர்.

கட்டுரை

கட்டுரை

இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய போதே, கொரோனா மரணங்களை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று ஐசிஎம்ஆர் அறிவுரை வழங்கி உள்ளது. ஐசிஎம்ஆர் வழங்கி இருக்கும் கட்டுப்பாட்டு முறைகள் மூலமே மாநிலங்கள் கொரோனா மரணங்களை மாவட்ட வாரியாக பெற்று, அதை அனுப்புகின்றன. மாநிலங்களின் கொரோனா மரணம் ஒன்றாக சேர்த்து தேசிய அளவில் அறிவிக்கப்படுகின்றன.

வழி

வழி

இதில் குறைவாக, அதிகமாக மரணங்களை குறிப்பிட முடியாது. ஐசிஎம்ஆர் இதற்கான முறையான வழிகாட்டுதல்களை வாங்கிவிட்டது. ஆனால் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் மரணங்களை கணக்கிடும் முறை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் முறை உலகில் எந்த நாட்டிலும் பின்பற்றப்படவில்லை.

கிறிஸ்தபர் லாப்லர்

கிறிஸ்தபர் லாப்லர்

கிறிஸ்தபர் லாப்லர் எனபவரால் விஜினியா காமென்வெல் பல்கலையில் வெளியிட்ட ஆய்வு ஒன்றை குறிப்பிட்டு இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா மரணங்களை எப்படி கணக்கிட வேண்டும் என்பது தொடர்பான முழுமையான வழிகாட்டுதல்கள் இதில் எங்கும் இல்லை. இந்த ஆய்வை எடுத்துக்காட்டாக வைத்து இந்தியாவில் கொரோனா மரணம் அதிக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

சி வோட்டர்

சி வோட்டர்

அதோடு தெலுங்கானாவில் செய்யப்பட அதிகமான இன்சூரன்ஸ் கிளைம்களை கொரோனா மரணத்தோடு ஆதாரமே இன்றி தொடர்புபடுத்தி உள்ளனர். சி வோட்டர், ப்ரஷ்னம் ஆகிய அமைப்புகளுடன் சர்வே எடுத்ததாகவும் கூறியுள்ளனர். ஆனால் இந்த அமைப்புகள் எல்லாம் சுகாதாரத்துறை தொடர்பானது இல்லை, தேர்தல் தொடர்பான சர்வே எடுக்கும் அமைப்புகள்.

டேட்டா

டேட்டா

இந்த அமைப்புகளின் டேட்டாக்களை வைத்து இந்தியாவில் கொரோனா மரணங்கள் அதிகம் இருக்கலாம் என்று கூறுவது முழுக்க முழுக்க தவறான முடிவு. இந்தியாவில் கொரோனா கேஸ்களையும், மரங்களையும் பதிவிடுவதில் ஒன்றிய அரசு வெளிப்படியாக செயல்படுகிறது. உலக சுகாதார மையம் வெளியிட்டு இருக்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றியே கொரோனா மரணங்களை பதிவு செய்து வருகிறோம்.

பெருந்தொற்று

பெருந்தொற்று

கொரோனா போன்ற பெருந்தொற்று சமயத்தில், சில சமயங்கள் சில மரணங்கள் விட்டுப்போகலாம். ஆனால் அந்த மரணங்களும் முறையான டேட்டா இருந்தால் மட்டுமே கணக்கிட முடியும், கொரோனா மரணங்கள் குறித்த முறையான சோதனைகளை, ஆய்வுகளை கொரோனா பரவலுக்கு பின் செய்வதன் மூலம் மட்டுமே அதை கணக்கெடுக்க முடியும் , என்று மத்திய அரசு கூறியுள்ளது.

English summary
International Magazine report excess Covid 19 death in India is baseless, and misinformed says Union Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X