பூமிக்கு வரும் ”சூரிய சுனாமி” இந்த தேதியில் இணைய சேவை பாதிப்பு? வாட்ஸ்ஆப்பில் பரவும் தகவல் உண்மையா?
டெல்லி : சூரியனில் உள்ள துகள்களில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக சூரிய சுனாமி எனும் அதிவேக புயல் உருவாகியுள்ளதாகவும், இந்த புயலானது வரும் 31ஆம் தேதி பூமியை தாக்கும் என்பதால் இண்டர்நெட் மற்றும் ஜிபிஎஸ் சேவைகள் பாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சூரியனில் இருந்து அதிக அளவில் காந்த துகள்கள் வெளியேறுவதே சூரிய காந்தப் புயல் என குறிப்பிடப்படுகிறது. வெளியேறும் இந்த காந்த துகள்கள் பூமியை நோக்கி நகர்கின்றன.
கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் 2.. சிம்புதேவன் உள்ளிட்ட இயக்குனர்கள் அறிமுகம்! இந்த துகள்கள் ஒரு மணி நேரத்திற்கு பல மில்லியன் கிமீ பயணம் செய்யும். இவை பூமியை அடைய சுமார் 13 மணிநேரம் முதல் ஐந்து நாட்கள் வரை ஆகலாம் எனக் கூறப்படும் நிலையில், பூமியின் வளிமண்டலம் இந்த துகள்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

பூமியின் சூரியப் புயல்
முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட சூரியப் புயல் 1859ல் ஏற்பட்டது. சுமார் 17 மணி நேரத்தில் பூமியை அடைந்த நிலையில் அப்போதைய டெலிகிராஃப் நெட்வொர்க்கை வெகுவாக பாதித்தது. பின்னர் 1921ல் ஏற்பட்ட ஒரு சூரியப் புயல் நியூயார்க் டெலிகிராஃப் மற்றும் ரயில் நெட்ஒர்க் அமைப்புகளைப் பாதித்தது. கடந்த 1989-ம் ஆண்டில் கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில் அப்போது சூரியனில் ஏற்பட்ட புயல் காரணமாக கடும் மின்சார அதிர்வை ஏற்படுத்தியது.

வெப்பப் பேரலை நிகழ்வு
இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியில் சூரியப் புயல் தாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரியனில் வெப்பப் பேரலை நிகழ்வு ஏற்பட்டதன் எதிரொலியால் ஓரிரு நாட்களில் சூரிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சூரிய துகள்களில் ஏற்பட்ட வெடிப்பால் அதிவேக சூரியக் காற்று சூரியனில் இருந்து வெளியானதாகவும், இது பூமியின் வளிமண்டலத்தை தாக்கி வரும் 31ஆம் தேதி சூரிய புயலாக உருவெடுக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இணைய சேவை பாதிப்பு
இதனால் உலகம் முழுவதும் ஜிபிஎஸ், இணையம் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விண்வெளியில் உள்ள செயற்கைகோள்களையும் இந்த சூரிய புயல் பாதிக்கும் என்பதால், அவை செயலிழக்கக் கூட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சு விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், மின் வழிதடங்களில் அழுத்த பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

கவனம் தேவை
விமானிகள், கடற்படையினர் மற்றும் ஹாம் ரேடியோ ஆபரேட்டர்கள், குறிப்பாக தெற்கு அட்லாண்டிக் பகுதியில், சில வித்தியாசமான வானொலி அலைகளில் பாதிப்புகள் இருக்கலாம் எனவும்," சுனாமி 'ரேடியோ-ஆக்டிவ்'," என்று Spaceweather.com தளத்தில் வானியல் நிபுணர் டாக்டர் டோனி பிலிப்ஸ் கூறியுள்ளார். ஆனால் மிகக் கடுமையாக பாதிப்புகள் இருக்காது என்றாலும் அதிக வெயில் காரணமாக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என போர்ப்ஸ் கூறியுள்ளார். விமானிகள், கடற்படையினர் மற்றும் ஹாம் ரேடியோ ஆபரேட்டர்கள், குறிப்பாக தெற்கு அட்லாண்டிக் பகுதியில், சில வித்தியாசமான வானொலி அலைகளில் பாதிப்புகள் இருக்கலாம் எனவும்," சுனாமி 'ரேடியோ-ஆக்டிவ்'," என்று Spaceweather.com தளத்தில் வானியல் நிபுணர் டாக்டர் டோனி பிலிப்ஸ் கூறியுள்ளார். ஆனால் மிகக் கடுமையாக பாதிப்புகள் இருக்காது என்றாலும் அதிக வெயில் காரணமாக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என போர்ப்ஸ் கூறியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications