உத்தரகாண்ட் காங்.கில் வெடித்த உட்கட்சி பூசல்.. ஹரிஷ் ராவத் போட்ட ட்வீட்.. சோனியாவுக்கு புது தலைவலி!
டெல்லி: பொதுவாக ஒரு கட்சியில் உட்கட்சி பூசல் அவ்வப்போது தலைதூக்குவது வழக்கம். ஆனால் காங்கிரசையும், உட்கட்சி பூசலையும் பிரிக்க முடியாது.ஏனெனில் பல மாநிலங்களில் காங்கிரசில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுவது தொடர்கதையாகி விட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் உட்கட்சி பூசல் காரணமாக பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் முதல்வர் பதவியையும் துறந்து, கட்சியில் இருந்தும் விலகி தனிகட்சியே ஆரம்பித்து விட்டார்.

உட்கட்சி பூசல்
இதேபோல் ராஜஸ்தான் மாநில காங்கிரசிலும் காலம், காலமாக நடந்து வரும் உட்கட்சி சண்டை இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது. கட்சியில் தொடர்ந்து வரும் பிரச்சினையை தீர்த்து வைப்பதே சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நிரந்தர வேலையாகி விட்டது. இதோ சோனியா காந்திக்கு அடுத்த தலைவலி வந்து விட்டது. பாஜக ஆட்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.

ஹரிஷ் ராவத் போட்ட ட்வீட்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும் உத்தரகாண்ட் பொறுப்பாளருமான தேவேந்திர யாதவ்வுக்கும், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத்துக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் ஹரிஷ் ராவத் போட்ட ட்வீட் ஒன்று உட்கட்சி பூசல் இருப்பதை வெளிப்படையாக உணர்த்துவதுபோல் உள்ளது.

கைகளையும், கால்களையும் கட்டி உள்ளனர்
''தேர்தல் எனும் கடலில் நீந்த வேண்டிய நிலையில் அதிகாரம் பல முதலைகளை அங்கே விட்டுச் சென்றிருக்கிறது. இவற்றை மீறி நாம் நீந்தி முன்னேற வேண்டும் என்னும்போது என் கைகளையும், கால்களையும் கட்டி உள்ளனர். எல்லாம் கைமீறி போயிட்டது. என் மனதின் ஒரு மூலையில் இருந்து ரகசியமாக ஒரு குரல் எழுகிறது. ஓய்வெடுக்க வேண்டிய நேரமிது என்று மனதில் பலமுறை எண்ணம் வருகிறது. குழப்பத்தில் இருக்கிறேன். இந்த புத்தாண்டு புது வழியை காட்ட வேண்டும். கடவுள் நல்வழி காட்டுவார் என நம்புகிறேன்'' என்று ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்.

நேரம் வரும்போது சொல்கிறேன்..
அதாவது தேவேந்திர யாதவ்வையும், ராகுல் காந்தியையும் குறிப்பிடுவதுபோல் ட்வீட் செய்துள்ளார் ஹரிஷ் ராவத். இதனால் உத்தரகாண்ட் காங்கிரசில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை ஹரிஷ் ராவத்திடம் சர்ச்சைகுரிய ட்வீட் குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், ''
நேரம் வரும்போது எல்லாவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களிடம் பேசாவிட்டால் வேறு யாரிடம் பேசுவேன்? நான் உங்களைக் கூப்பிடுகிறேன். இப்போதைக்கு வேடிக்கை மட்டும் பாருங்கள்' என்று கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications