டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போக்குவரத்து வசதிக்காக "ஒரே நாடு, ஒரே கார்டு" அறிமுகம்.! ஏடிஎம் அட்டையாகவும் பயன்படுத்தலாம்

Google Oneindia Tamil News

Recommended Video

    UNION BUDGET 2019 | போக்குவரத்து மற்றும் மின்விநியோகத்துக்காக புது திட்டம் அறிவிப்பு- வீடியோ

    டெல்லி: நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்வதற்கு ஏதுவாக, ஏடிஎம் போன்ற ஒரே நாடு ஒரே அட்டை திட்டத்தை துவக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    Introducing One Country, One Card for Transport Can also be used as an ATM card

    இது பற்றி அறிவிப்பு வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேஷனல் காமன் மொபைலிட்டி கார்டு அதாவது ஒரே நாடு ஒரே அட்டை திட்டம் மூலம், இந்தியா முழுவதும் பல போக்குவரத்து கட்டணங்களை மக்கள் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்தார்.

    ஏடிஎம் கார்டு செயல்பாட்டை போலவே இந்த கார்டின் செயல்பாடும் இருக்கும். இது ரூபே கார்டாக இருக்கும். இந்த கார்டின் மூலம் பயனாளர்கள் பேருந்து கட்டணம் மற்றும் பார்கிங் கட்டணங்களை செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய பட்ஜெட் 2019: இந்திய பொருளாதாரம் 3 லட்சம் கோடி டாலராக வளர்ச்சி பெறும்: நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2019: இந்திய பொருளாதாரம் 3 லட்சம் கோடி டாலராக வளர்ச்சி பெறும்: நிர்மலா சீதாராமன்

    இந்த தேசிய போக்குவரத்து அட்டையானது நாடு முழுவதிலும் பயணம் செய்யும் போதும் பயன்படுத்தி கொள்ளலாம். சாலை மற்றும் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்துகளை பயன்படுத்தும் போது, இந்த கார்டை பயன்படுத்தி மக்கள் எளிதாக கட்டணம் செலுத்தி பயணத்தை மேற்கொள்ள முடியும்

    இந்த கார்டை வைத்து ஏடிஎம் போல பணம் எடுத்து கொள்ளவும் பயனாளர்கள் உபயோகப்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றார்

    English summary
    It has been announced in the Central Budget that the only country like ATM is planning to launch a single card scheme to facilitate travel anywhere in the country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X