டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி கலவரம் குறித்த 'நியூயார்க் டைம்ஸ்' கட்டுரை பொய்யானது..ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவின் புகழ் நியூயார்க் டைம்ஸ் இதழில் நேற்று வெளியிடப்படப்பட்ட "நாங்கள் உங்களை கொன்றால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது: முஸ்லிம்களுக்கு எதிராக டெல்லி போலீஸ் எப்படி திரும்பியது" என்ற பெயரில் வெளியிட்டப்பட்ட கட்டுரை, முற்றிலும் பொய்யானது என இந்திய ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. .

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது, இஙகே யாரை கொல்வதற்கும் யாருக்கும் உரிமை இல்லை என்று ஐபிஎஸ் அதிகாரிகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் நடந்த சிஏஏ வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஏராளமான மக்களின் வாழ்வாதாரங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டன. வீடுகள், கட்டிடங்கள், கடைகள், தீ வைத்து எரிக்கப்பட்டன. மிகப்பெரிய கலவரத்தில் குறிப்பிட்ட சமூக மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் டெல்லி போலீசார் நடு நிலையுடன் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது

டெல்லி போலீஸ்

டெல்லி போலீஸ்

இந்நிலையில் இந்திய ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் டெல்லி போலீஸ் குறித்து பரவும் தகவல்களை பொய் என்று கண்டித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,. "நியூயார்க் டைம்ஸ் கடந்த மார்ச் 12ம் தேதி வெளியிடப்படப்பட்ட "நாங்கள் உங்களை கொன்றால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது: முஸ்லிம்களுக்கு எதிராக டெல்லி போலீஸ் எப்படி திரும்பியது" என்ற பெயரில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்டுரையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆபத்தான பொய்கள்

ஆபத்தான பொய்கள்

அந்த கட்டுரையில் டெல்லி போலிசின் நடத்தை குறீத்து, ஒருபக்க சார்பான அறிக்கை உள்ளது, அதில் ஆபத்தான வெளிப்படையான பொய்கள் கலந்தது தெரிவிக்கப்பட்டுளள்து. இந்த கட்டுரை தெளிவாக இந்தியாவின் காவல்துறை மற்றும் நீதிதுறை உள்ளிட்ட இந்திய நிறுவனங்களை இழிவிப்படுத்தி அவதூறு செய்வதற்கான ஒருங்கணைந்த முயற்சியாக உள்ளது.

உயிரையும் கொடுத்துள்ளது

உயிரையும் கொடுத்துள்ளது

இந்திய போலீஸ் படைகள் அச்சமோ, தயவு தாட்சணையோ இல்லாமல் பணியாற்றுகின்றன. எங்கள் காவல்துறையினர் இந்துக்களோ முஸ்லிம்களோ அல்ல. அவர்கள் இந்தியர்கள், இந்தியர்களுக்கு சேவை செய்கிறார்கள் மற்றும் முக்கியமான காலங்களில் அவர்கள் இந்தியர்களுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்துள்ளனர்.

யாருக்கும் உரிமையில்லை

யாருக்கும் உரிமையில்லை

காவல்துறையினரின் மீது குற்றம்சாட்டுவது எளிதானது, ஆனால் டெல்லி கலவரத்தில் 2 காவல்துறையினர் உயிர் இழந்துள்ளனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதை நினைவுபடுத்த விரும்பிகிறோம். இந்தியாவின் போலிஸ் படைகள் தங்கள் கடமையைச் செய்து கொண்டே இருக்கும், மேலும் ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வார்கள். இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு யாரும் யாரையும் கொல்வதற்கு உரிமை இல்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
IPS association condemns new york times article over delhi riots. they said India is governed by law, no one has immunity from killing anyone!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X