Arun IPS: இனி கவனமுடன் செயல்படுவேன்.. உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ஐபிஎஸ் அதிகாரி அருண்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னையில் கட்டுமான நிறுவன உரிமையாளரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்ட விவகாரத்தில், சென்னை முனனாள் காவல் ஆணையரும், ஐபிஎஸ் அதிகாரியுமான அருண் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். தனக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பதிவு செய்த கண்டனங்களை நீக்கக் கோரி தாக்கல் செய்த மனுவின் போது இந்த நிபந்தனையற்ற மன்னிப்பை அருண் கோரியுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் சகோதரரும் ராஜ்யசபா எம்பியுமான எல்.கே சுதிஷின் மனைவிக்கு சென்னை கொளத்தூரில் 2 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி அதில் 78 குடியிருப்புகளை சுதிஷ் மற்றும் பூர்ண ஜோதி என்பவருக்கு ஒதுக்குவதாக தனியார் கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் போட்டது.

IPS officer Arun offers an unconditional apology in suprem Court

குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு

இந்த ஒப்பந்தம் அடிப்படையில் சுதிஷ் மற்றும் அவரது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட 78 குடியிருப்புகளை போலி கையெழுத்திட்டு 43 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கட்டுமான நிறுவன உரிமையாளரான சந்தோஷ் சர்மா ஜாமீனில் விடுதலை செய்யபட்டார். அதன்பிறகு வாங்கிய குடியிருப்புகளை ஒப்படைக்காமல் ஏமாற்றிவிட்டதாக 2025-ல் புதிய வழக்கு ஒன்று அவர் மீது பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில் சந்தோஷ் சர்மா மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க அப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அருண் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் சம்ராவின் மகள் வர்ஷா சர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்ட அதிகாரி யார்? என்று கடுமையாக கேள்விகளை எழுப்பினர். மேலும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து இருந்தது. இதற்கிடையே, தனக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் கூறிய கருத்துகளை நீக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில், அருண் ஐபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மன்னிப்பு கோரினா அருண் ஐபிஎஸ்

இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் ஆர். மகாதேவன், அபரேஷ்குமார் சிங் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஐபிஎஸ் அதிகாரி அருண் நேரில் ஆஜரானதோடு, குண்டர் சட்டம் பிறப்பித்த விஷயத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு அபிடவிட்டும் தாக்கல் செய்தார். ஐபிஎஸ் அதிகாரி அருணின் மன்னிப்பையும் எதிர்காலத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதாக அளித்த உறுதிமொழியையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மேலும், ஒருவரின் தனிநபர் சுதந்திரத்தைப் பாதிக்கும் குண்டர் சட்டம் போன்ற தடுப்பு காவல் அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது உரிய கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். ஒருவரது சுதந்திரத்தை பாதிக்கும் விவகாரத்தில் அதிகாரத்தை பயன்படுத்திவிட்டு, பின்னர் மன்னிப்பு கேட்பது அதற்கு மாற்றாகிவிடாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், சென்னை ஐகோர்ட் அருண் ஐபிஎஸ்க்கு எதிராக பிறப்பித்த கண்டனங்கள் மட்டும் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி அருண் தவெக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர், காவல்துறை அகடாமிக்கு மாற்றப்பட்ட அருண், வீரமணி வழக்கு விவகாரத்திற்கு பிறகு கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+