Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் குடும்ப கட்சியா? காந்தி குடும்பம் அல்லாத தலைவர்கள் இவ்ளோ பேரு இருக்காங்களே - இதோ லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் சசி தரூரை வீழ்த்தி மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்று இருக்கும் நேரத்தில் அவர் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் மற்றும் அதை அவரால் இதை சமாளிக்க முடியுமா என்பது குறித்து விரிவாக காண்போம்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதியான நேற்று காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

 தேர்தல் முடிவு

தேர்தல் முடிவு

அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 தேதி தொடங்கி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் நேருக்கு நேர் மோதினர். கடந்த 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று இன்று முடிவுகள் எண்ணப்பட்டது. இதில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றுள்ளார்.

யார் இந்த கார்கே?

யார் இந்த கார்கே?

மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தலித் குடும்பத்தில் பிறந்து இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார். 1969 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் நீண்ட அரசியல் அனுபவமும் காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய தலைவராகவும் திகழ்ந்து வருகிறார். உயர்சாதியினர் அதிகம் வசிக்கும் குர்முட்கள் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக 9 முறை வென்றுள்ளார். சிதார்பூர் தொகுதியிலும் ஒருமுறை இவர் வென்று இருக்கிறார்.

காந்தி குடும்ப தலைவர்கள்

காந்தி குடும்ப தலைவர்கள்

காந்தி குடும்பத்தை பொறுத்தவரை 1919 மற்றும் 1928 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேருவும், 1929 முதல் 1930, 1936 - 1937, 1951 முதல் 1954 வரை மூன்று முறை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், 1959, 1966 முதல் 1967, 1978 - 1984 என மூன்று முறை இந்திரா காந்தியும், 1985 முதல் 1991 வரை ராஜீவ் காந்தியும், 1998 முதல் 2017, 2019 முதல் 2022 வரை இருமுறை பல ஆண்டுகள் சோனியா காந்தியும், 2017 முதல் 2019 வரை ராகுல் காந்தியும் காங்கிரஸ் தலைவர்களாக இருந்துள்ளனர்.

இனி காந்தி குடும்பம் அல்லாத தலைவர்களின் வரிசையை பார்ப்போம்.

போகராஜு பட்டாபி சித்தராமையா

போகராஜு பட்டாபி சித்தராமையா

சுதந்திரத்துக்கு பின்னர் கடந்த 1948 முதல் 1949 வரை காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர்தான் இந்த போகராஜு பட்டாபி சித்தராமையா. மத்திய பிரதேச மாநிலத்தின் முதல் ஆளுநராக இருந்தவர் இவராகும். முன்னாள் பிரதமர் நேரு ஆதரவுடன் காங்கிரஸ் தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டார்.

 புருசோத்தம் தாஸ் டாண்டன்

புருசோத்தம் தாஸ் டாண்டன்

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர் புருசோத்தம் தாஸ் டாண்டன். சுதந்திர போராட்ட தியாகியாகும். 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர். 1961 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது. இதேபோல 1955 முதல் 1959 வரை 4 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர் உச்சரங்ராய் நவால்சங்கர் தெபார். சவுராஷ்டிராவைச் சேர்ந்தவர்.

நீலம் சஞ்சீவன ரெட்டி

நீலம் சஞ்சீவன ரெட்டி

இந்திய விடுதலை போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்துக் கொண்டவர் நீலம் சஞ்சீவன ரெட்டி. 1960 முதல் 1963 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தார். ஆந்திர பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக பதவி வகித்தவர் இவர். 1977 முதல் 1982 வரை இந்திய குடியரசுத் தலைவராகவும் பதவியை அலங்கரித்தார்.

 காமராஜர்

காமராஜர்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், நாடு கண்ட காங்கிரசின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர் கர்மவீரர் காமராஜர். இவர் 1964 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். 1954 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் காமராஜர்.

 எஸ்.நிஜலிங்கப்பா

எஸ்.நிஜலிங்கப்பா

1968 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரானவரும் தென்னிந்தியாவை சேர்ந்தவரான எஸ்.நிஜலிங்கப்பாதான். கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்து இருக்கிறார். இதேபோல 1970 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக சுதந்திர போராட்ட வீரர் பாபு ஜக்ஜீவன் ராம் பதவியேற்றார். கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தவர் ஷங்கர் தயாள் சர்மா.
அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகியான தேவாங்கா பருவா 1975 முதல் 1977 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தார்.

பி.வி.நரசிம்மராவ்

பி.வி.நரசிம்மராவ்

பமுலபரதி வெங்கட நரசிம்மராவ் என்ற பி.வி.நரசிம்மராவ் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். 1992 முதல் 1996 வரை இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தார். 1991-1996 காலகட்டத்தில் நரசிம்மராவ், இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இந்திய புதிய பொருளாதார சீர்திருத்தம் இவரது காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+