நிதிஷ்குமார்தான் முதலமைச்சர் வேட்பாளர்.. ஒரு வழியாக ஒப்புக்கொண்ட அமித்ஷா! NDA-ல் குழப்பம் இல்லையாம்!
டெல்லி: பீகார் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளர் என யாரும் அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார், இந்த தேர்தலில் பாஜகவால் கை விடப்படுவார் என்று பேச்சுக்கள் அடிபட்டிருந்த நிலையில், தற்போது நிதிஷ்குமார்தான் எங்கள் முதல்வர் வேட்பாளர் என்று அமித்ஷா உறுதியாக கூறியிருக்கிறார்.
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளுக்கு நவ.6 மற்றும் நவ.11 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் எனில் 122 தொகுதியை கைப்பற்ற வேண்டும். மாநிலத்தில் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருக்கிறார். அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருக்கிறது.

சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் முதலமைச்சர் ஆகலாம் என்று நிதிஷ்குமார் கனவு கண்டுக்கொண்டிருந்த நிலையில், அவரது கனவில் அடுத்தடுத்து இடியை இறக்கியது பாஜக. முதலில் தொகுதி பங்கீட்டை சரிசமமாக பிரித்தது. அதாவது பாஜக 101 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இது இதற்கு முன்னர் நடக்காத ஒரு விஷயம். தேர்தல் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் ஐக்கிய ஜனதா தளத்தின் கைதான் ஓங்கியிருக்கும். ஆனால் இந்த முறை தொகுதி பங்கீட்டை சரிசமமாக பிரித்ததன் மூலம் நிதிஷ் குமாருக்கு செக் வைத்தது.
இரண்டாவது செக், முதலமைச்சர் வேட்பாளர். தேர்தலில் ஜெயித்தால் முதல்வர் ஆகிவிடலாம் என்று நிதிஷ்குமார் எதிர்பார்த்திருந்தார். ஆனால், நிதஷ்குமார்தான் எங்கள் முதல்வர் வேட்பாளர் என்று பாஜகவில் யாரும் வாயை திறந்து சொல்லவில்லை. அமித்ஷா கூட, "ஜெயித்த பின்னர் யார் முதல்வர் என்று எம்எல்ஏக்கள் தீர்மானிப்பார்கள்" என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார். இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நிதிஷ்குமார்தான் முதலமைச்சர் என்று அமித்ஷா உறுதியாக கூறியிருக்கிறார்.
பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இதை கூறியிருக்கிறார். "நிதிஷ்குமார்தான் எங்கள் முதலமைச்சர். அவர் தலைமையில்தான் தேர்தலை எதிர்கொள்கிறோம். இதில் என்டிஏ கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை. முதலமைச்சர் தொடர்பாக வதந்திகள் பரப்ப கூடாது" என்று கூறினார். அதேபோல நிதிஷ்குமாரின் உடல் நிலை குறித்த கேள்விக்கு, "நிதிஷ்குமார் தினமும் 5 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதுவே ஆரோக்கியத்தின் அடையாளம்தான்" என்று கூறியிருக்கிறார்.
என்டிஏ தேர்தல் அறிக்கை வெளியீட்டில் நிதிஷ்குமார் பேச அனுமதிக்கப்படாதது, தொகுதி பங்கீட்டில் சமரசம் என அடுத்தடுத்து நிதிஷ்குமாரை பாஜக வெளிச்சத்திற்கு வர விடாமல் பார்த்துக்கொண்டது, பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்நிலையில், இந்த சலசலப்புகளுக்கு அமித்ஷாவின் பதில் முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறது.
என்டிஏ கூட்டணியில்தான் இப்படி எனில், மறுபுறம் காங்கிரஸ், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மகாபந்தன் கூட்டணியிலும் இதே கதைதான். இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் இருக்க வேண்டும் என்று கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் விரும்பின. ஆனால், காங்கிரஸ் மட்டும் பிடிவாதம் பிடித்தது. தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. எனவே, கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருந்து. 2014லிலிருந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. இப்படிபட்ட நிலையில் எதுக்கு வெட்டி வீராப்பு? என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
தொடர் நெருக்கடியை அடுத்து தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications