கல்யாண பொண்ணு ராதிகா தான்! ஆனா ஊரு கண் முழுக்க இஷா அம்பானி மீதுதான்! வாயை பிளக்க வைக்கும் ஆடைகள்
டெல்லி: நாட்டின் பெரும் கோடீஸ்வரக்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா ஆகியோரின் திருமணம் அடுத்த வாரம் நடக்கும் நிலையில், இதற்கான சடங்குகள் இப்போது நடந்து வருகிறது. இவர்களின் சங்கீத் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த நிலையில், இதில் மணமகள் ராதிகாவை காட்டிலும் அம்பானியின் மூத்த மகள் இஷா அம்பானி அணிந்திருந்த ஆடைகளைப் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
நாட்டின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஆனந்த் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம் ஜூலை 12ஆம் தேதி நடக்கிறது. திருமணத்தை முன்னிட்டு இப்போது சடங்குகள் உள்ளிட்ட மற்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

திருமணம்: இதற்கிடையே ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்வின் சங்கீத் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பாலிவுட் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாகப் பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பெய்பரும் இதில் கலந்து கொண்டார். அவரது இசை நிகழ்ச்சியும் இதில் கலந்து கொண்டோரை வாயைப் பிளக்க வைத்தது.
அதேபோல பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கொண்டாட்டங்கள் அரங்கேறின. இது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களைப் பெரியளவில் கவர்ந்தன.
இஷா அம்பானி ஆடை: இந்த சங்கீத் நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்தது என்றால் அது இஷா அம்பானியின் அட்டகாசமான ஆடைகள் தான். முகேஷ் அம்பானியின் மூத்த மகளான இஷா அம்பானி இந்த சங்கீத் நிகழ்ச்சியில் அணிந்திருந்த ஆடை தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த சங்கீத் நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த ஆடைகளை ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் அனிதா ஷ்ராஃப் அடாஜானியா என்பவர் தனது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் ஒரு நாளில் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் இஷா அம்பானி மூன்று ஆடைகளை அணிந்துள்ளார். இது நெட்டிசன்கள் கவனத்தைப் பெரியளவில் ஈர்த்துள்ளது. மணமகள் ராதிகா கூட ஒரு ஆடையை மட்டுமே அணிந்த நிலையில், இஷா அம்பானி தனது சகோதரர் சங்கீத் 3 ஆடைகளை அணிந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் அணிந்திருந்த ஆடைகள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

முதல் ஆடை: இஷா அம்பானி அணிந்திருந்த முதல் ஆடை இத்தாலியைச் சேர்ந்த Schiaparelli என்ற பேஷன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. இந்த ஆடையை டேனியல் ரோஸ்பெர்ரீ என்ற பேஷன் டிசைனர் வடிவமைத்து இருந்தார். நீல நிற புடவையில் வெள்ளி நிற பிளவுஸ் உடன் மிகவும் நேர்த்தியாகவும் ராயல் லுக்கில் இஷா அம்பானி இருந்தார்.

இரண்டாவது ஆடை: இஷா அம்பானியின் இரண்டாவது ஆடை என்பது சிகப்பு நிற லெஹங்கா ஆடை.. பக்காவான வேலைப்பாடுகள், கற்கள் என்று மிகக் கலக்கலாக இருந்தது. இந்த ஆடையில் சுமார் 1.5 லட்சம் வெள்ளி படிகங்கள் இருந்துள்ளது. அந்தளவுக்கு இந்த ஆடையைப் பார்த்துப் பார்த்து வடிவமைத்துள்ளனர். இந்த ஆடையைப் பிரபல பேஷன் வடிவமைப்பாளர்கள் ஃபால்குனி & ஷேன் பீக்காக் வடிவமைத்துள்ளனர்.

மூன்றாவது ஆடை: அவரது மூன்றாவது ஆடையும் ஒரு லெஹங்கா தான். முன்பு அணிந்திருந்த லெஹங்கா பாரம்பரிய முறையில் இருந்தது என்றால் இது சற்று மார்ட்னாக இருந்தது. இதை பேஷன் டிசைனர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்துள்ளார். சில்வர் மற்றும் க்ரீன் நிறத்தில் இருந்த இந்த லெஹங்காவும் சமூக வலைத்தளங்களில் லைக்ஸ்களை அள்ளியது.












Click it and Unblock the Notifications