அங்க மோடிக்கு எதிராக பேச்சு! இங்க சிபிஐ சம்மன்! நேரா போலீஸ் ஸ்டேஷன் போன சத்யபால் மாலிக்-என்னாச்சு
டெல்லி: புல்வாமா தாக்குதலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பான குற்றச்சாட்டை கூறிய நிலையில் சிபிஐ சார்பில் மற்றொரு வழக்கில் அவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று திடீரென சத்யபால் மாலிக் டெல்லி போலீஸ் நிலையத்துக்கு ஆதரவாளர்களுடன் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவர் கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை அங்கு ஆளுநராக பொறுப்பு வகித்தார். இந்த வேளையில் தான் கொடூரமான புல்வாமா மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அதாவது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் கவலையடைய செய்தது.
இந்த சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையில் சத்யபால் மாலிக் செய்தி நிறுவனத்திடம் சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை குற்றம்சாட்டி இருந்தார். இதுபற்றி சத்யபால் மாலிக் ‛‛சிஆர்பிஎப் வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே நடந்தது.

சிஆர்பிஎப் வீரர்களை அழைத்து செல்ல விமானம் கேட்கப்பட்டது. ஆனால் அது வழங்கப்படவில்லை. அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானம் கொடுக்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது. இதுபற்றி பிரதமர் மோடியிடம் கூறினேன். இது நம் தவறு விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது என்று தெரிவித்தேன். ஆனால் பிரதமர் இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அமைதியாக இருக்கும்படியும் தெரிவித்தார்'' என கூறினார்.
இவரது குற்றச்சாட்டு பெரும் விவாதத்தை கிளப்பியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இதற்கிடையே தான் காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. காஷ்மீரில் இவர் ஆளுநராக இருந்தபோது நீர்மின் திட்டம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்க லஞ்சம் தர சில நிறுவனங்கள் முன்வந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுபற்றி விளக்கம் அளிக்க அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் 28 ம் தேதி அவர் சிபிஐ முன்பு ஆஜராக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தான் இன்று ஒரு பரபரப்பு சம்பவம் நடந்தது. அதாவது சத்யபால் மாலிக் தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் உள்ள வீட்டின் அருகே பூங்காவில் உள்ள காலி இடத்தில் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த டெல்லி போலீசார் உடனடியாக அங்கு சென்று சத்யபால் மாலிக் மேற்கொண்டு ஆலோசனை நடத்த தடை விதித்தனர். குடியிருப்பு பகுதிகளில் அதிகமானவர்களை அழைத்து ஆலோசனை நடத்த உரிய அனுமதி பெற வேண்டும் என கூறினர்.
இதையடுத்து சத்யபால் மாலிக் தனது ஆதரவாளர்களுடன் டெல்லி போலீஸ் நிலையத்துக்கு திடீரென்று சென்றார். இதற்கிடையே தான் சத்யபால் மாலிக்கை டெல்லி போலீசார் கைது செய்ததாக செய்திகள் பரவின. பிரதமர் மோடிக்கு எதிராக சமீபத்தில் அவர் குற்றம்சாட்டிய நிலையில் சிபிஐயும் சம்மன் அனுப்பி இருக்கும் நிலையில் இந்த தகவல் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கிடையே தான் டெல்லி போலீசார் கைது நடவடிக்கையை புறம்தள்ளினர்.
இதுபற்றி டெல்லி போலீசார் விளக்கமும் அளித்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‛‛சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார். போலீசார் அனுமதி வழங்காததால் ஆதரவாளர்களுடன் போலீஸ் நிலையத்துக்கு அவரே வந்தார். அவர் கைது செய்யப்படவில்லை. சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார்'' என்றார். இந்த சம்பவம் சிறிது நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications