டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களுக்காக மக்களால் மார்ச் 22-ல் கடைபிடிக்கப்படும் மக்கள் ஊரடங்கு - முக்கிய அம்சங்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று மக்களுக்காக மக்களாலேயே மார்ச் 22-ல் ஊரடங்கு நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது. கொரோனா எனும் கொடிய வைரஸை மக்களே எதிர்கொள்வதற்காக இந்த மக்கள் ஊரடங்கு நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

உலகையே பேரழிவை நோக்கி இழுத்துச் செல்கிறது கொரோனா வைரஸ். இத்தாக்குதல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று இரவு உரையாற்றினார்.

Janata Curfew for the people- by the people

இந்த உரையில் அடுத்து வரும் நாட்களுக்கு பொதுமக்கள் எப்படியான வாழ்வியல் முறைகளை கடைபிடிக்க வேண்டும்- இதன் மூலமாக கொரோனா வைரஸை எப்படி எதிர்கொள்வது என விவரித்தார். இதில் மிக முக்கியமாக வரும் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தாங்களே ஊரடங்கு நிலைமையை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இதன் முக்கிய அம்சங்கள்

  • மார்ச் 22 ஜனதா ஊரடங்கு அல்லது சுய ஊரடங்கு அல்லது மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கும் போது சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது
  • மக்களின் ஊரடங்கு என்பது காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நீடிக்கும்.
  • மக்களின் ஊரடங்கை காவல்துறை, மருத்துவ துறை, ஊடகங்கள் உள்ளிட்ட அன்றாட பணிகளில் ஈடுபட்டிருப்போர் பின்பற்ற தேவை இல்லை.
  • மருத்துவப் பணி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டோருக்கு மார்ச் 22 மாலை 5 மணிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
  • மக்களின் ஊரடங்கு குறித்து ஒவ்வொருவரும் 10 பேருக்காவது எடுத்து விளக்கி இதில் பங்கேற்க செய்ய வேண்டும்.
  • இப்போது கடைபிடிக்கப்படும் மக்களின் ஊரடங்கு கட்டுப்பாடு பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க எதிர்காலத்திலும் உதவும்.
English summary
Prime Minister Narendra Modi called Janata Curfew on Sunday -March 22.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X