டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்டா கொரோனாவுக்கு எதிராக மிக குறைவாகவே செயல்படுமாம் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக மிக மிக குறைவாக செயலாற்றும் தன்மை கொண்டது ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

இனி மாஸ்க், தனிமனித இடைவெளி என எந்த கட்டுப்பாடும் இல்லை.. போரிஸ் ஜான்சன் சாதித்து காட்டியது எப்படிஇனி மாஸ்க், தனிமனித இடைவெளி என எந்த கட்டுப்பாடும் இல்லை.. போரிஸ் ஜான்சன் சாதித்து காட்டியது எப்படி

யு.எஸ். டெல்டா வைரஸ்

யு.எஸ். டெல்டா வைரஸ்

அமெரிக்காவில் கொரோனா அதிகரிப்புக்கு காரணம் டெல்டா வகை வைரஸ்; அமெரிக்காவின் கொரோனா தொற்று பாதிப்பில் 80%-க்கும் அதிகம் டெல்டா வைரஸால் ஏற்படுகிறது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜான்சன் தடுப்பூசி

ஜான்சன் தடுப்பூசி

இதனிடையே கடந்த சில வாரங்களாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை ஒரே ஒரு டோஸ் போட்டால் போதும்; 8 மாதத்துக்கு நோய் எதிர்ப்பு திறன் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அளிக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.

நரம்பியல் பாதிப்பு நோய்

நரம்பியல் பாதிப்பு நோய்

இதனையடுத்து ஜான்சன் தடுப்பூசி குறித்து விமர்சனங்கள் வரத் தொடங்கின. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியானது அரிதான நரம்பு கோளாறு நோயான Guillain Barre Syndrome ஏற்படுத்துகிறது என அமெரிக்கா எச்சரித்தது. இது உலக நாடுகளில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எதிர்ப்பு சக்தி குறைவு

எதிர்ப்பு சக்தி குறைவு

இப்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி அப்படி ஒன்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது அல்ல; குறிப்பாக டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக மிக மிக குறைவான அளவுதான் செயலாற்றும் தன்மை கொண்டது எனவும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் உலக நாடுகள் ஜான்சன் தடுப்பூசியை பயன்படுத்துமா? தடை விதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
According to the study reports, Johnson & Johnson's COVID-19 vaccine not very effective against Delta varriant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X