Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிப்பூர் வன்முறை! 2000 மணி நேரத்தை மவுனத்தில் கடத்திய பிரதமர்.. இப்போ 30 செகன்ட் பேசுறாரு.. ஜோதிமணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து 2000 மணி நேரத்தை மவுனத்திலேயே செலவிட்ட பிரதமர் நரேந்திர மோடி அந்த விவகாரம் குறித்து வெறும் 30 வினாடிகள் மட்டுமே பேசியுள்ளார் என கரூர் எம்பி ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குகி பழங்குடி ஆகிய இரு சமூகங்களுக்கு இடையே வன்முறை நடைபெற்று வருகிறது. இதனால் மணிப்பூரில் பதற்றமான சூழல் நிகழ்ந்து வருகிறது. வன்முறையின் போது 2 பெண்கள் நிர்வாணமாகப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்கள். 78 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Jothimani MP says that today she bring adjournment motion to debate about Manipur incident

இந்த சம்பவத்தை திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கரூர் எம்பி ஜோதிமணி ட்விட்டரில் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் நிலவும் நிலைமை குறித்து உடனடியாக விவாதிக்க இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்துள்ளேன்.

மணிப்பூரில் நிலவும் பயங்கரமான சூழ்நிலைக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசு வழங்கிய பதில்களை, நான் அதிர்ச்சியுடனும், அவநம்பிக்கையுடனும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

மணிப்பூரில் நடந்துவரும் வன்முறை மற்றும் அதன் கொடூரமான தாக்கம் குறித்து 2000 மணி நேரம் மவுனத்திலேயே கடத்திய பிறகு, பிரதமர் வெறும் முப்பது வினாடிகள் பேசியுள்ளார். அதிலும் மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக நிலவும் வன்முறை குறித்தோ, அதன் கொடூரமான தாக்கம் குறித்தோ அவர் வாய்திறக்கவில்லை

மணிப்பூர் மாநில அரசோ, இந்த கொடூரமான சம்பவத்தை அலட்சியமாகக் கடந்துபோகிறது.
இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறி மணிப்பூர் முதலமைச்சர், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் குறைத்து மதிப்பிட முயல்வது மிகவும் அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.

இப்படி நூறு நிகழ்வுகள் நடந்தால், இரண்டு மாதங்களாக அரசும், அரசு அதிகாரமும் என்ன செய்துகொண்டிருந்தது? நீங்கள் மௌனப் பார்வையாளராக நின்றீர்களா? அல்லது உங்கள் அரசு இயந்திரம் குற்றவாளிகளுக்குப் பக்கபலமாக இருந்து, பெண்கள் மற்றும் அப்பாவி மக்களுக்கு எதிரான வன்முறையைச் செயல்படுத்தியதா?

பெண்களை நிர்வாண அணிவகுப்பு நடத்தி,பாலியல் பலாத்காரம் செய்யும்,நெஞ்சைப் பதறவைக்கும் காணொளியை கண்டு, மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மேலும், "அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்றும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார்.

இனவாத கலவரம் நடக்கும் பகுதியில், பெண்களின் உடல்கள் எப்படி ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் இந்தப் புரிதல் பிரதமருக்கோ,மணிப்பூர் முதல்வருக்கோ இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வன்முறையை கையாள்வதில் வாய்மூடி மௌனப் பார்வையாளர்களாக இருந்து, மணிப்பூர் மக்களை கைவிட்டுவிட்டன.

இப்போது அமைதி ஒன்றே முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழி. வன்முறைக்கு தீர்வு காண்பதற்கும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்குவதற்கான வழிகளை இந்த நாடாளுமன்றம் தற்போது ஆராய்வது மிகவும் முக்கியம். இன்று மணிப்பூரைப் பற்றி விவாதிக்கத் தவறினால், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் நமது கடமையிலிருந்து தவறியவர்களாகவே காணப்படுவோம். இவ்வாறு கரூர் எம்பி ஜோதிமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+