டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திக்கு இணையாக 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம்- கனிமொழி நோட்டீஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திக்கு இணையாக 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் தருவது தொடர்பாக லோக்சபாவில் திமுக எம்பி கனிமொழி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. தொடக்க நாள் முதலே பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் அளித்து வருகின்றனர்.

Kanimozhis Adjournment Motion notice over promoting all languages equally along with Hindi

லோக்சபாவில் திமுக எம்பி கனிமொழி இன்று, 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்தும் வழங்குவது குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்தார். இந்தியாவில் சீனா நிறுவனம் 10,000க்கும் அதிகமானோரை வேவு பார்த்தது குறித்த விவாதிக்க வேண்டும் என காங். லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தினார்.

நீட் தேர்வின் வெற்றி தோல்வி மட்டும் உங்கள் வாழ்க்கையை முடிவு செய்துவிடாது - கனிமொழி நீட் தேர்வின் வெற்றி தோல்வி மட்டும் உங்கள் வாழ்க்கையை முடிவு செய்துவிடாது - கனிமொழி

கிழக்கு லடாக்கில் சீனாவின் ஊடுருவல் குறித்து விவாதிக்க கோரியுள்ளது திரிணாமுல் காங்கிரஸ். டெல்லி வன்முறை வழக்குகளில் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களை சேர்த்ததற்கு எதிர்ப்பு காங்கிரஸ், சிபிஎம், ஆர்.எஸ்.பி எதிர்த்து தெரிவித்து நோட்டீஸ் அளித்துள்ளன.

ஜிடிபி சரிவு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கினர். டெல்லி போலீசாரின் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்திருக்கிறது.

English summary
DMK MP Kanimozhi has given Adjournment Motion notice in Lok Sabha over 'promoting all 8th scheduled languages equally along with Hindi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X