அனைத்தும் காவிமயமா? இதையாவது விட்டு வையுங்க.. கொலீஜியம் குறித்து மத்திய அரசு மீது கபில் சிபல் சாடல்
டெல்லி: கொலீஜியத்தை கலைப்பதன் மூலம் நீதித்துறையை கைப்பற்றி அதில் தங்கள் சித்தாந்தம் கொண்ட ஆட்களை அமர வைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.
கொலீஜியம் அமைப்பு முறைக்கு மத்திய அரசு தொடர்ந்து விமர்சித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ கொலீஜியம் குறித்து வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
சமீபத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டிய அமைச்சர் கிரன் ரிஜிஜூ நீதிபதிகள் கொலீஜியத்தின் மூலம் இதர நீதிபதிகளை நியமிப்பதில் காலத்தை செலவிடுகிறார்கள் என்று சாடியிருந்தார்.

விமர்சனம்
எனவே கொலீஜியம் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். மேலும் அவர் கூறியதாவது, "1993ம் ஆண்டு வரை நீதிபதிகள் நியமனம் என்பது சட்டத்துறை மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்றது. அக்காலகட்டங்களில் நாடு சிறப்பான நீதிபதிகளை கொண்டிருந்தது. இதில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. அதாவது குடியரசுத் தலைவர்தான் நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்பதுதான் அது. கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனத்தை நாட்டு மக்கள் எதிர்க்கின்றனர். அதேபோல தங்கள் சசோகதரர்களையே சக நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவில்தான் நிகழ்கிறது. கொலிஜியம் அமைப்பால் அதில் இருக்கும் நீதிபதிகளின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. நீதிபதிகளுக்கு நீதியை வழங்குவதுதான் பிரதான பணி" என்று குறிப்பிட்டிருந்தார்.

பல்வேறு துறைகள்
இவ்வாறு இருக்கையில் 'மிரர் நவ்' செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த கபில் சிபல், "நீதிமன்றம் காவி நிறமாக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை" என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "தற்போது அனைத்து துறைகளையும் மத்திய அரசு கைப்பற்றியுள்ளது. எல்லா துறையிலும் அவர்களுடைய சித்தாந்தம் கொண்ட ஆட்கள்தான் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் நீதி துறையை கைப்பற்றி அதிலும் அவர்களுக்கு தேவையான ஆட்களை நியமித்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்தானதாக அமைந்துவிடும். மத்தியில் உள்ளவர்களின் சித்தாந்தத்தை கொண்டவர்கள் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களாக இருக்கிறார்கள்.

நம்பிக்கை
மாநிலங்களில் ஆளுநராக இருக்கிறார்கள். அதேபோல அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ என அனைத்திலும் இவர்கள்தான் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பாஜக புகழ் பாடி வருகிறார். இவ்வாறு இருக்கைய நீதிபதிகளையும் விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள். தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மையுடன் இருப்பதால் எனன வேண்டுமானாலும் செய்யலாம். தற்போது இருக்கும் கொலீஜியம் முறை குறித்து மாற்றுக்கருத்து இருக்கிறது. ஆனால், அரசு நீதிபதிகளை நியமிப்பதை விட இது சிறந்தது. நீதித்துறையை கைப்பற்றுவதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் ஜனநாயகத்தின் கடைசி கோட்டை நீதிமன்றம்தான். அதுவும் கைப்பற்றப்பட்டுவிட்டால் எங்களுக்கு நம்பிக்கையற்று போய்விடும்.

காவி
தற்போது உள்ள அமைச்சர்கள், சட்ட அமைச்சர் உட்பட பலரும் பட்டம் மட்டுமே பெற்றிருக்கிறார்கள். அவர்கள் பயிற்சி செய்வதில்லை. இதனால் வழக்கறிஞர்கள் குறித்து அவர்களுக்கு தெரியாது. இன்றைய வழக்கறிஞர்கள்தான் நாளைய நீதிபதிகள். தற்போதைய கொலீஜியம் முறை சட்டத்திற்கு உட்பட்டதுதான். ஆனால் கொலீஜியம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. ஏனெனில், கொலீஜியத்தில் இடம்பெற்றிருப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த நெருக்கமானவர்களை நீதிபதிகளாக நியமித்துள்ளதாக அவர்கள் மீது விமர்சனங்கள் இருக்கிறது. எப்படியாயினும் நீதித்துறை காவிமயமாக்கப்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications