அப்பாவோ கஸ்டடியில்.. காஷ்மீருக்காக களமிறங்கி போராடிய மகன்.. டெல்லியில் கலக்கிய கார்த்தி!

ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்காக டெல்லியில் திமுக எம்பிக்களுடன் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் போராட்டம் நடத்தினார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திமுக பின் திரண்ட 13 கட்சிகள்.. காஷ்மீருக்காக டெல்லியில் போராட்டம்- வீடியோ

    டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்காக டெல்லியில் திமுக எம்பிக்களுடன் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் போராட்டம் நடத்தினார்.

    காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

    காங்கிரஸ், மதிமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் , பகுஜன் சமாஜ் ஆகிய கட்சி நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

    கார்த்தி சிதம்பரம்

    கார்த்தி சிதம்பரம்

    இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் கலந்து கொண்டார். பாஜக கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி இவர் போராட்டம் செய்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், தொண்டர்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    காலையில் சென்றார்

    காலையில் சென்றார்

    இன்று காலையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சென்னையில்தான் இருந்தார். தன்னுடைய அப்பா ப. சிதம்பரம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகளால் நெருக்குதலுக்கு உள்ளான போது கூட கார்த்தி சிதம்பரம் சென்னையில்தான் இருந்தார். இந்த நிலையில் இந்த திமுக போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் சென்னையில் இருந்து டெல்லி சென்றார்.

    அடுத்து என்ன

    அடுத்து என்ன

    இந்த நிலையில்தான் இன்று மதியம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. இந்த விசாரணையின் போது கார்த்தி சிதம்பரம் நீதிமன்றம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    என்ன ஆலோசனை

    என்ன ஆலோசனை

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரமும் சிக்கி இருக்கிறார். அதனால் அவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆகவே தற்போது அவர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்ய தனது டெல்லி வீட்டிற்கு சென்றுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+