உணவு டெலிவரி ஊழியர்கள் படும் பாடு... மத்திய அமைச்சருக்கு உருக்கமான கடிதம் எழுதிய கார்த்தி சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உணவு டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பையும், சமூக மரியாதையையும் மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கடந்த 16 ஆம் தேதி மக்களவையில் சுவிக்கி, சொமாட்டோ உணவு டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கும் அவர் கடிதம் எழுதி இருக்கிறார். அதில், "இந்தியாவில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் இதுபோல் டெலிவரி ஊழியர்களாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பையும், நலத்திட்டங்களையும் நிறுவனங்கள் வழங்குவது இல்லை.

95.3% தொழிலாளர்களுக்கு காப்பீட்டு இல்லை

95.3% தொழிலாளர்களுக்கு காப்பீட்டு இல்லை

இதுபோன்ற நிறுவனங்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் டெலிவரி ஊழியர்களை தங்கள் நிறுவன ஊழியர்கள் என்று குறிப்பிடுவதுகூட இல்லை. இது தொடர்பாக 6 நகரங்களில் INDIAN FEDERATION OF APP BASED TRANSPORT WORKERS (IFAT) மற்றும் சர்வதேச போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு (ITF) இணைந்து நடத்திய ஆய்வில் 95.3% தொழிலாளர்களுக்கு விபத்து, மருத்துவக் காப்பீட்டு போன்றவை வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

கொரோனா 2 வது அலையின்போது இந்த ஊழியர்களின் குடும்பத்தினர் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதில் முன்னணியில் உள்ள 2 நிறுவனங்கள் சிறந்த பணியிடங்களுக்கான தரவரிசையில் (FAIR WORKS INDIA RATINGS 2021-ல்) 10க்கு பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டும் இந்த 2 உணவு டெலிவரி நிறுவனங்கள் தரவரிசையில் கடைசி இடத்திலேயே இருந்தன.

அழுத்தம் கொடுக்கும் நிறுவனங்கள்

அழுத்தம் கொடுக்கும் நிறுவனங்கள்

மேலும் டெலிவரி ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் குறிப்பிட்ட அளவு உணவு டெலிவரி செய்தாக வேண்டும் என்ற (TURN AROUND TIME-TAT) யை நிறுவனங்கள் நிர்ணயித்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், தினம் தினம் அவர்களுக்கு நேரும் சோகங்களின்போது இந்த நிறுவனங்கள் துணை நின்று உதவுவது இல்லை.

பாதுகாப்புக்கு நிதி ஒதுக்க வேண்டும்

பாதுகாப்புக்கு நிதி ஒதுக்க வேண்டும்

மத்திய அரசு தனது சமூக பாதுகாப்பு குறியீட்டில் இதுபோன்ற உணவு டெலிவரி ஊழியர்களை "இருசக்கர வாகன தொழிலாளர்கள்" என்ற பெயருடன் இணைக்க வேண்டும். இவர்களை வைத்து வேலை வாங்கும் நிறுவனங்கள் தங்கள் ஆண்டு வருமானத்தில் 1-2% வரையோ அல்லது தங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 5% வரையிலோ அவர்களின் சமூக பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டும்.

தொழிலாளர் உரிமை, சலுகைகள் வழங்க வேண்டும்

தொழிலாளர் உரிமை, சலுகைகள் வழங்க வேண்டும்

அதேபோல் அந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், மகப்பேறு சலுகைகள் உள்ளிட்டவற்றை வழங்க வெண்டும். இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளைபோல், அவர்களை தொழிலாளர்களாக அறிவிப்பதுடன் அவர்களின் கண்ணியத்தையும் காக்க வேண்டும். அத்துடன் டெலிவரி ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் குறிப்பிட்ட அளவு உணவு டெலிவரி செய்தாக வேண்டும் என்ற (TURN AROUND TIME-TAT) யை அரசு தடை செய்ய வேண்டும்." என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+