பஹல்காம் தாக்குதல்! "மன்னித்து விடுங்கள்" சுற்றுலா பயணிகளிடம் சொன்ன காஷ்மீர் உள்ளூர்வாசிகள்! மனிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்த நிலையில் அங்கு வந்த சுற்றுலா பயணிகளை பத்திரமாக அப்பகுதியில் இருந்து அனுப்பி வைக்கும் முயற்சியின் போது உள்ளூர் மக்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

kashmir

காஷ்மீரின் அழகை ரசிக்க வந்த இடத்தில் இப்படியொரு துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அந்த மக்கள் தெரிவித்திருந்தனர்.

காஷ்மீரின் குட்டி ஸ்காட்லாந்து என அழைக்கப்படுவது பஹல்காம். இங்கு ஒரு இடத்தில் வனங்கள், அழகிய ஏரிகள், புல்வெளிகள் என இயற்கை அழகு கொஞ்சும் வகையில் இருக்கும். இந்த இடத்திற்கு சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

பஹல்காம்

அது போல்தான் கடந்த 22 ஆம் தேதியும் பஹல்காமுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த 4 பேர், நீங்கள் எந்த மதம் என கேட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

துப்பாக்கிச் சூடு

இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவை சேர்ந்த 25 பேரும் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சுற்றுலா பயணிகளை டெல்லிக்கு அழைத்து வரும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

மருத்துவர் பரமேஸ்வர்

அதிலும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தால் இன்னுயிர்களை இழந்தவர்களின் குடும்பத்தினர் மிகவும் உடைந்து போயுள்ளனர்.

ஜம்மு முதல்வர்

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியிருப்பதாவது: அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது என தெரிவித்திருந்தார்.

அனந்த்நாக் உதவி எண்

அனந்த்நாக் காவல் துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளின் உதவிக்காக அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தொடர்பு கொள்ள 9596777669, 01932225870 மற்றும் வாட்ஸ்அப் எண் 9419051940 அணுகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீர் பயங்கரவாதிகள்

இந்த நிலையில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலின் போது உள்ளூர் மக்கள் பலர், சுற்றுலா பயணிகளுக்கு உதவிய காட்சிகள், மதங்களுக்கு அப்பால் ஒவ்வொருவரும் இந்தியன் என்ற நினைப்பு அனைவர் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

குதிரை சவாரி தொழில்

இந்த தாக்குதலின் போது உள்ளூர்வாசி சையது அடில் ஹுசைன் ஷா என்பவரும் கொல்லப்பட்டுள்ளார். இவர் குதிரை சவாரி தொழில் செய்து வந்தவர். தீவிரவாத தாக்குதலில் பெண் ஒருவரை பாதுகாக்கும் நோக்கில் தீவிரவாதியின் துப்பாக்கியை தைரியமாக பிடுங்க முயற்சித்தார்.

இரக்கமில்லாத மிருகங்கள்

அப்போது தீவிரவாதிகளின் இரக்கமற்ற துப்பாக்கிச் சூட்டில் சையது உயிரிழந்தார். இவரது மரணத்தால் இவரது குடும்பமே தவித்து வருகிறது. இவரது வருமானத்தால் மட்டுமே இவரது குடும்பம் பிழைத்து வந்த நிலையில் அவரை இழந்துவிட்டு அவருடைய தாய் கதறும் காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சையத்தின் இறுதிச் சடங்கில் முதல்வர் உமர் அப்துல்லா கலந்து கொண்டார்.

சுற்றுலா பயணியை முதுகில் சுமந்த நபர்

அது போல் குண்டடிப்பட்ட சுற்றுலா பயணி ஒருவரை அந்த இடத்தில் இருந்து மீட்டு அவரை முதுகில் தூக்கிக் கொண்டு உள்ளூர்க்காரர் ஒருவர் ஓடி வந்த காட்சிகள் மனிதம் இருப்பதை உணர்த்தியது.

உள்ளூர் மக்களுக்கு நன்றி

அது போல் இந்த தாக்குதலில் உயிர் பிழைத்து வந்தவர்கள் கூறுகையில், "நாங்கள் இன்று உயிருடன் இருக்க காரணமே உள்ளூர் மக்கள்தான். அவர்கள்தான் எங்களுக்கு உதவினர். எங்களை பத்திரமாக மீட்டு வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர்" என்றனர்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

அந்த வகையில் பஹல்காம் சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகளிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது சுற்றுலாவுக்கு மகிழ்ச்சியாக இருக்க வந்துவிட்டு இப்படி ஒரு துர்பாக்கியமான சம்பவம் நடந்துவிட்டதே என கூறி மன்னிப்பு கேட்டனராம்.

மன்னிப்பு கேட்ட உள்ளூர்வாசிகள்

சுற்றுலா பயணிகளை மீட்டு அவரவர் வந்த வாகனங்களில் அமர வைத்த உள்ளூர்வாசிகள் அவர்களுக்கு தேவையான தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவைகளை வாங்கி கொடுத்து அனுப்பினர். அப்போதுதான் அவர்கள் மன்னிப்பு கேட்டனர்.

மனிதம்

"நம்ம ஊருக்கு சுற்றுலா வந்துவிட்டு இப்படி ஆகிவிட்டதே " என அந்த ஊர் மக்கள் மனதளவில் வேதனையில் இருப்பது நன்றாகவே தெரிகிறது. யார் எந்த மதம் என பார்க்காமல் அவர்களும் மனிதர்கள், இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் காப்பாற்றிய அந்த ஊர் மக்கள் எல்லாம் உயர்ந்த மனிதர்கள்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+